
ஆட்கொல்லி புற்றுநோய் :
Russia's cancer vaccine achieves 100% efficacy : ஆட்கோல்லி நோய்களில் ஒன்று புற்றுநோய். இயல்புக்கு மாறாக கட்டுப்பாடற்று உயிரணுக்கள் பிரிந்து பெருகுவதால் ஏற்படும் புற்றுநோய், வேகமாக பரவும் ஆற்றல் கொண்டது. அது உடலில் இருக்கும் இடத்தை பொருத்து, புற்றுநோய்க்கு பெயரிடப்படுகிறது.
புற்றுநோயால் 13% பேர் மரணம் :
கட்டிகளாக ஏற்படும் புற்றுநோய்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, பாதிக்கப்பட்டவர் மீட்கப்படுகிறார். அப்படி இல்லா விட்டால், கதிரியக்கம், மருந்துகள் மூலமும் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. புற்றுநோய் காரணமாக சுமார் 13 சதவீதம் பேர் மரணிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
புற்றுநோய்க்கு தடுப்பூசி :
புற்றுநோய் வராமல் தடுக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் நீண்ட நாட்களாக ஈடுபட்டு வருகின்றன. இதில் ரஷ்யா முதல் நாடாக வெற்றியை ஈட்டி இருக்கிறது. இதில் 100 சதவீதம் வெற்றி கிடைத்து இருப்பதாக ரஷ்ய அரசு அறிவித்துள்ளது.
புற்றுநோய்க்கான எம்ஆர்என்ஏ தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக ரஷ்யாவின் சுகாதாரத் துறை கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மைய ( Federal Medical and Biological Agency) இயக்குநர் ஆண்ட்ரே கப்ரின் கடந்த ஆண்டு இறுதியில் தெரிவித்திருந்தார்.
புற்றுநோய் கட்டிக்கு முற்றுப்புள்ளி :
புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசியை செலுத்தினால் கட்டி (ட்யூமர்) வளர்வது தடுக்கப்படுவது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு மனிதர்களிடத்திலும் சோதிக்கப்பட்டுள்ளது. அதற்கான செயல்திறன் 100 சதவீதம் துல்லியமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய் தடுப்பூசி சார்ந்த மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் ஆய்வுகள் வெற்றிகரமாக முடிந்துள்ளதாகவும், இது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
விரைவில் சந்தையில் அறிமுகம் :
புற்றுநோய் தடுப்பூசிக்கு ரஷ்ய மருத்துவத்துறை அனுமதி அளித்ததும் சந்தையில் பயன்பாட்டுக்கு வரும். அண்மையில் சீனா சென்றிருந்த ரஷ்ய அதிபர் புதின், அந்நாட்டு அதிபர் ஜி ஜிப்பிங்கிடம் மனிதர்கள் 150 ஆண்டுகள் வரை வாழும் அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்து இருப்பதாக தெரிவித்து இருந்தார்.
புற்றுநோய் செல்களை மட்டுமே அழிக்கும் :
கொரோனா தடுப்பூசிக்கு பயன்படுத்தப்பட்ட அதே எம்.ஆர்.என்.ஏ., நுட்பமே இந்த தடுப்பூசிக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.ஒவ்வொரு நோயாளிக்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட அடுத்த தலைமுறை நோயெதிர்ப்பு சிகிச்சையாக இது இருக்கும். ஆரோக்கியமான செல்களை சேதப்படுத்தாமல், புற்றுநோய் செல்களை துல்லியமாக குறிவைத்து அழிக்கும் திறன் கொண்டதாக இது இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
=============