பிகாரில் முதன்முறையாக பாஜக ஆட்சி : 20 ஆண்டு நிதிஷ்குமார் அரசுக்கு பிரியாவிடை : முதல்வரானார் சாம்ராட் சவுத்ரி

பிகாரில் முதன்முறையாக பாஜக ஆட்சி அமைத்து இருக்கும் நிலையில், முதலமைச்சராக பொறுப்பேற்றார் சாம்ராட் சவுத்ரி.
Samrat Chowdhury took charge as the Chief Minister of Bihar, BJP forming the government for the first time
Samrat Chowdhury took charge as the Chief Minister of Bihar, BJP forming the government for the first timegoogle
1 min read

பிகாரில் என்டிஏ ஆட்சி

Samrat Choudhary Sworn In As Bihar Chief Minister, BJP Leads Govt In State For First Time : பிகார் சட்டசபைக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்​டணி அமோக வெற்றி பெற்று ஆட்​சி​யைத் தக்​க​வைத்​தது.

10 முறை முதல்வர் நிதிஷ்

இதையடுத்து முதல்​வ​ராக நிதிஷ்கு​மார் 10வது முறை​யாகப் பொறுப்​பேற்​றார்.

இந்​நிலை​யில், பிகாரில் கடந்த மாதம் நடை​பெற்ற மாநிலங்​கள​வை தேர்​தலில் போட்​டி​யிட்ட முதல்​வர் நிதிஷ்கு​மார், ராஜ்யசபா எம்.பி​யா​னார்.

கடந்த 10ம் தேதி எம்பியாக அவர் பதவி​யேற்​றுக் கொண்​டார். நேற்று அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

முதல்வரானார் சாம்ராட் சவுத்ரி

நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி, முதல்வர் பதவியை பாஜகவிற்கு விட்டுக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து பாஜக

எம்​எல்​ஏக்​கள் கூட்டத்தில் துணை முதல்​வ​ர் சாம்​ராட் சவுத்ரி சட்​டப்​பேர​வைக் குழுத் தலை​வ​ராக ஒரு​மன​தாக தேர்வு செய்​யப்​பட்​டார்.

இதையடுத்து, ஆளுநரை சந்தித்த அவர் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதன்படி, பிகார் புதிய முதல்​வ​ராக சாம்​ராட் சவுத்ரி இன்று பதவியேற்றுக் கொண்டார். பிகாரின் 21வது முதல்வர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிகாரில் பாஜக ஆட்சி

தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற விழாவில் சாம்ராட் சவுத்ரிக்கு, ஆளுநர் சையத் அடா ஹஸ்​னைன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதன்மூலம் முதன்முறையாக பாஜக ஆட்சியை அமைத்து சாதனை படைத்துள்ளது. சுதந்திர இந்தியாவில் இதுவரை பிகாரில் பாஜக ஆட்சி அமைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த சாம்ராட் சவுத்ரி?

நிதிஷ்குமார் அரசியல் துணை முதல்வராக இருந்த சாம்ராட் சவுத்ரி, குஷ்வாஹா சமூகத்தை சேர்ந்தவர்.

லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தில் பொறுப்புகளில் இருந்தவர்.

பாஜகவில் சாம்ராட் சவுத்ரி

2017ம் ஆண்டு பாஜகவில் இணைந்த அவர், 2023ல் அக்கட்சியின் மாநிலத் தலைவரானார். தற்போது முதல்வராக சாம்ராட் சவுத்ரி பொறுப்பேற்றுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in