உத்தரப் பிரதேச தேர்தல் 2027: 6.8 லட்சம் பக்க வாக்காளர் பட்டியலை எளிதில் தேடும் வகையில் மாற்றி இளைஞர் சாதனை!

உத்தர பிரதேச தேர்தல் ஆணையம் வெளியிட்ட 6.8 லட்சம் பக்க வாக்காளர் பட்டியல் பி.டி.எப். ஆவணங்களை, OCR தொழில்நுட்பம் மூலம் எளிதில் தேடக்கூடிய டிஜிட்டல் தரவுத்தளமாக மாற்றிய இளைஞர் பற்றிய விரிவான தகவல் !
Sarthak Siddhant 18 Year Old Jharkhand Youth UP Voter List Searchable Database
Sarthak Siddhant 18 Year Old Jharkhand Youth UP Voter List Searchable Databasesource: ai generated
1 min read

Sarthak Siddhant 18 Year Old Jharkhand Youth UP Voter List Searchable Database

54.8 கோடி வாக்காளர் விவரங்களை டிஜிட்டல் மயமாக்கி சாதனை

அடுத்த ஆண்டு (2027) நடைபெறவுள்ள உத்தர பிரதேச சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) மேற்கொண்டு இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஆனால், இந்த வாக்காளர் விவரங்கள் அனைத்தும் 6.8 லட்சம் பக்கங்கள் கொண்ட தனித்தனி பி.டி.எப். (PDF) கோப்புகளாக வெளியிடப்பட்டதால், வாக்காளர்கள் தங்கள் பெயரைத் தேடுவதற்கு ஒவ்வொரு கோப்பையும் பதிவிறக்கம் செய்து பக்கம்பக்கமாகப் பார்க்க வேண்டிய சிரமமான சூழல் நிலவியது.

இந்தப் பிரச்சனைக்கு ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் சர்தக் சித்தாந்த் என்பவர் எளிய தொழில்நுட்ப தீர்வை கண்டு பிடித்துள்ளார்.

ஓ.சி.ஆர். (OCR) தொழில்நுட்பம் மூலம் கட்டமைக்கப்பட்ட தரவுத்தளம்

சர்தக் சித்தாந்த், தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட 6.8 லட்சம் ஸ்கேன் செய்யப்பட்ட பி.டி.ஃப். பக்கங்களைக் ’ஆட்டிகல் கேரக்டர் ரெகக்னிஷன்’ தொழிநுட்பத்தின் உதவியுடன் கணினியால் எளிதில் படிக்கக்கூடிய மற்றும் தேடக்கூடிய கட்டமைக்கப்பட்ட தரவு தொகுப்பாக (Searchable Database) மாற்றி அசத்தியுள்ளார்.

403 தொகுதிகளின் விவரங்கள்

இதன் மூலம் உத்தரப் பிரதேசத்தின் 403 சடசபைத் தொகுதிகளில் உள்ள 54.8 கோடி வாக்காளர்களின் விவரங்களை மிக எளிதாகவும், விரைவாகவும் தேட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களுக்கு இலவசமாகக் கிடைக்கும் 4 முக்கியப் பட்டியல்கள்

இந்தப் புதிய டிஜிட்டல் தரவுத்தளத்தில் கீழ்க்கண்ட நான்கு வகையான வாக்காளர் பட்டியல் ஆவணங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல்

  • சிறப்பு தீவிர திருத்தப் பணியின் (SIR) வரைவு வாக்காளர் பட்டியல்

  • சிறப்பு தீவிர திருத்தப் பணியின் இறுதி வாக்காளர் பட்டியல்

  • 2027 சட்டசபைத் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல்

பொதுமக்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இந்தத் தரவுகளை எவ்விதக் கட்டணமும் இன்றி இலவசமாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

===========