ஹஜ் செல்லும் இஸ்லாமியர்களுக்கு நற்செய்தி : நியூ இன்சூரன்ஸ் சவுதி அரேபியா அரசு அறிவிப்பு

Saudi Arabia New Health Insurance for Hajj, Umrah Pilgrims : ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரைக்காக வருபவர்களுக்கு சவுதி அரசு புதிய இன்சூரன்ஸ் முறைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Saudi Arabia government announces new 90-day health insurance policy for overseas Hajj, Umrah pilgrims
Saudi Arabia government announces new 90-day health insurance policy for overseas Hajj, Umrah pilgrims Source : Google
1 min read

அவசர சுகாதார தேவைக்கான சேவை

Saudi Arabia New Health Insurance for Hajj, Umrah Pilgrims : ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரைக்காக உலகம் முழுவதும் இருந்து வருகை புரியும் முஸ்லிம் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சவுதி அரேபியா அரசு வெளிநாடுகளில் இருந்து வரும் யாத்திரிகர்களுக்கான சுகாதார பாதுகாப்பை கருத்தில் கொண்டு அதனை மேம்படுத்தும் நோக்கில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதியமுறை அறிமுகம்

அவர்கள் தங்கும் காலத்தில் ஏற்படக்கூடிய அவசர சுகாதார தேவைகளுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கத்தில் இதனைஅறிமுகப்படுத்தியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இந்த இன்சூரன்ஸ் யாருக்கு பொருந்தும்

சவுதி அரேபியாவுக்கு வெளியிருந்து வரும் ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரிகர்கள் மற்றும் யாத்திரை விசா பெற்றுள்ளவர்கள் மட்டுமே இதனை பயன்படுத்திக்கொள்ள முடியும். மாறாக சவுதி குடிமக்கள் அல்லது நிரந்தர வசிப்போர் இதனை பயன்படுத்த இயலாது

அதிகபட்சமாக 90 நாட்கள் வரை இந்த அவசர கால காப்பீட்டை பயன்படுத்தி கொள்ளலாம்.

என்னென்ன சேவைகளை இந்த காப்பீடு வழங்குகிறது

அவசர மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனைகள்

தேவையான மருத்துவமனை அனுமதி மற்றும் மருந்துகள்

திடீர் விபத்துகள், குறிப்பாக போக்குவரத்து விபத்துகளுக்கான சிகிச்சை போன்றவை மட்டுமே இதில் அடங்கும் .குறிப்பாக அவசர கால மருத்துவ சிகிச்சைக்கு மட்டுமே இதனை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இத்திட்டத்தின் முக்கியத்துவம்

இத்திட்டத்தின் முக்கியத்துவமாக உலக சுகாதார அமைப்புகளுடன் இணைந்து டிஜிட்டல் சுகாதார முயற்சிகள் மேற்கொள்ளவதும் மேலும்

24 மணி நேரமும் செயல்படும் பல மொழி சேவை கொண்ட 937 ஒருங்கிணைந்த சுகாதார உதவி மையம் மற்றும்

ஹஜ் யாத்திரிகர்களுக்கு கட்டாய மருத்துவ சான்றிதழ் மற்றும் முன்பயணத்திற்கு முன்பு சுகாதார பரிசோதனைகள் ஆகியவைகளை இந்த சேவை அளிக்கிறது.

விஷன் 2030

இந்த நடவடிக்கை, சவுதி அரேபியாவின் “விஷன் 2030” நோக்கத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.

குறிப்பாக பெரிய மதச் சந்திப்புகளின் போது விரைவான மருத்துவ சேவையை உறுதி செய்வதற்கும், யாத்திரிகர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் இந்த சேவை பெரும் பங்காற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

==================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in