

மேற்கு வங்கம் - பாஜக அரசு
மேற்கு வங்கத்தில் சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக அரசு முதன்முறையாக பொறுப்பேற்றுள்ளது. தேர்தல் வாக்குறுதிப்படி ஏற்கனவே, மகளிருக்கு இலவச பேருந்து பயண திட்டம் கடந்த 1ம் தேதி அமலுக்கு வந்தது.
மகளிர் நிதியுதவி திட்டம்
தேர்தலின் போது மகளிருக்கு மாதம் 3,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்து இருந்தது. ஏற்கனவே, மம்தா பானர்ஜி முதல்வராக இருந்த போது, மகளிருக்கு மாதம் ரூ.1,500 நிதியுதவியாக வழங்கப்பட்டு வந்தது.
‘அன்னபூர்ணா யோஜனா'
இந்தநிலையில் மாதம் 3,000 வழங்கும் ‘அன்னபூர்ணா யோஜனா' திட்டத்தை, முதல்வர் சுவேந்து அதிகாரி தொடங்கி வைத்தார்.
28.25 லட்சம் மகளிர் பயன்
அன்னபூர்ணா திட்டத்துக்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக இணைய தளத்தில், கடந்த மூன்று நாட்களில் 28,25,769 பயனாளிகள் பதிவு செய்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவாதமும், இரட்டை இன்ஜின் அரசின் அர்ப்பணிப்பும் ரூ.3,000 நிதியுதவி வழங்கும் வாக்குறுதி நிறைவேற்றப்படுவதை உறுதி செய்துள்ளது என்று முதல்வர் சுவேந்து அதிகாரி தெரிவித்தார்.
அனைத்து பெண்களுக்கு நிதியுதவி
புதிய விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். மூன்று மாதங்களில் சரிபார்ப்புப் பணிகள் முடிவடைந்த பின்னர், தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் மாதம் ரூ.3,000 நிதியுதவி வழங்கப்படும்.
வங்கிக் கணக்கில் நிதியதவி செலுத்தம்
விண்ணப்பப் படிவங்கள் பெறப்பட்டு சரிபார்ப்பு முடிந்ததும், பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.3,000 நேரடியாகச் செலுத்தப்படும். தகுதியுள்ள ஒவ்வொரு பெண்ணும் இந்த பலனைப் பெறுவதை உறுதி செய்வதே எங்களின் இலக்கு, என்று முதல்வர் சுவேந்து அதிகாரி உறுதியளித்தார்.
========