

இதில் சீனா, இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா, ஈரான் உட்பட 10 நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இந்தியா சார்பில் பங்கேற்ற ராஜ்நாத் சிங், சிந்தூர் ஆபரேஷன் குறித்த நிலைப்பாட்டை ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.
பயங்கரவாதத்தை எந்த நாடும் ஆதரிக்க கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்தநிலையில், ஷாங்காய் மாநாட்டின் கூட்டறிக்கையில் பஹல்காம் தீவிரவாத தாக்குதல், இந்தியாவின் எந்தக் கருத்தும் இடம்பெறவில்லை.
அதேசமயம், பலுஜிஸ்தான் பிரச்சினை பற்றி மட்டும் மறைமுகமாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
எனவே, ஷாங்காய் மாநாட்டின் கூட்டறிகையில் கையெழுத்திட முடியாது என்று ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.
=====