திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக ரகசிய கூட்டம் ; கட்சிக்குள் பிளவா, மம்தாவிற்கு எதிராக வலுக்கும் சூழல்

சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸை வீழ்த்தி பாஜக ஆட்சியை கைப்பற்றியது , இந்த நிலையில் மம்தாவிற்கு எதிராக கட்சிகுள் பிளவானது ஏற்ப்பட்டுள்ளது
Secret meeting against Trinamool Congress; Split within the party,  against Mamata
Secret meeting against Trinamool Congress; Split within the party, against Mamata google
2 min read

ஆட்சியை கைப்பற்றிய பாஜக

மேற்கு வங்க மாநில சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் மம்தாவை வீழ்த்தி பல வருடங்களுக்கு பிறகு பாஜக ஆட்சியை கைபற்றியுள்ளது . முதல்​வ​ராகச் சுவேந்து அதி​காரி பொறுப்​பேற்​றார். இதனை தொடர்ந்து மேற்குவங்கத்தில் பாஜக பல ஆண்டுகளுக்கு பிறகு தனது ஆட்சியை நிறுவியுள்ளது

மம்தாவிற்கு எதிராக கட்சிகுள் பிளவு

தேர்​தலில் தோல்வி அடைந்த திரிண​மூல் காங்​கிரஸ் மூத்த தலை​வர்​கள் மற்​றும் வெற்றி பெற்ற எம்​எல்​ஏ.க்​கள் பலர் அக்கட்சியின் தலைவர் மம்தாவிற்கு எதிராக போர்கொடி தூக்குகின்றனர் , குறிப்பாக பாஜக.வுக்கு தாவ முயற்​சித்து வரு​கின்​றனர்.

எனினும், தற்​போதைக்​குத் திரிண​மூல் கட்​சி​யில் இருந்து வருபவர்​களை கட்​சி​யில் சேர்க்க வேண்​டாம் என்று பாஜக மேலிடம் உத்​தர​விட்​டுள்​ள​தாகவும் கூறப்​படு​கிறது.

பாஜகவிற்கு ஆதரவு ; கட்சியில் இருந்து நீக்கம்

மேற்கு வங்கத்தில் புதிய அட்சியை கைப்பற்றியிருக்கும் பாஜகவிற்கு ஆதரவாக ,திரிண​மூல் தேசிய செய்​தித் தொடர்​பாள​ரும் மூத்த தலை​வரு​மான ரிஜு தத்தா முன்​னர் பாஜக தலை​வர்​களை வெகு​வாகப் பாராட்டி பேசியிருந்தார் ,இது கட்சிக்குள்ளையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது

தேர்​தலுக்​குப் பிந்​தைய வன்​முறை​யின் போது தனது குடும்​பத்​தைக் காப்​பாற்​றியதற்​காகப் பாஜக தலை​வர்​களுக்கு ரிஜு தத்தா நன்றி தெரி​வித்​திருந்​தார்.

இது கட்சிகுள்ளையே பெரும் அதிரவலையை ஏற்படுத்தியிருந்தது .இந்த நிலையில் கட்​சித் தலை​வர் மம்தா பானர்​ஜி, ரிஜுவை கட்​சி​யில் இருந்து இடைநீக்​கம் செய்தார். இதை போல் மேலும் சிலர் இடைநீக்​கம் செய்​யப்​பட்​டனர்.

இடைநீக்கம் குறித்து தெரிவித்துள்ள ரிஜு கூறியதாவது

பாஜகவிற்கு ஆதரவாக பேசியதற்காக , ரிஜு இடைநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து ,இந்த நிலைப்பாடு குறித்து பேசிய ரிஜு ,மேற்கு வங்​கத்​தில் தற்​போது மகா​ராஷ்டிர மாடல் அரசி​யல் அரங்​கேறி வரு​கிறது. எங்​களிடம் மூன்​றில் இரண்டு பங்கு பெரும்​பான்மை உள்​ளது. சுமார் 50 எம்​எல்​ஏ.க்​கள் எங்​களு​டன் இணைந்து செயல்​படு​கின்​றனர். நாங்​கள்​தான் உண்​மை​யான திரிண​மூல் காங்​கிரஸ்.

பெரும்​பான்மை எம்​எல்​ஏ.க்​கள் எங்​கள் வசம் இருப்​ப​தால், கட்​சி​யின் சின்​னத்தை நாங்​களே தக்க வைத்​துக் கொள்ள அனு​ம​திக்க வேண்​டும் என்றும் தெரிவித்துள்ளார் , இதனால் இது கட்சிக்குள்ளயே அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது

கட்சி பிளவு பற்றி பேசிய மம்தா

தனது கட்சி சார்ந்தவர்கள் தாக்கப்பட்டதிற்கு எதிராக போரட்டதில் ஈடுப்பட்ட மம்தா கூறியதாவது , மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகள் உள்ளன. இதில் 177 தொகுதிகளில் பாஜக முறைகேடுகளை செய்து வெற்றி பெற்றுள்ளது.

முதலில் எஸ்ஐஆர் மூலம் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்ககப்பட்டது மற்றும் தேர்தலின் போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு ஆகியவை எனக்கெதிராக நடத்தப்பட்டது என்றும் , நான் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தேன். ஆனால் முறைகேடுகளால் தோல்வி அடைந்தேன் என்றும் கூறிப்பிட்டுருந்தார்

கட்சியே எனக்கெதிராக மாறி வருகிறது

மேலும் சமீப காலமாக எனது கட்சித் தலைவர்களே துரோகிகளாக மாறி வருகின்றனர். எனக்கு எதிராகவும் திரிணமூல் காங்கிரஸுக்கு எதிராகவும் சதி வேலைகளைச் செய்து வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு ஒன்று சொல்கிறேன். திரிணமூல் கட்சியைக் கட்டிக்காக்க ‘செய் அல்லது செத்துமடி’ என்ற வகையில் நாம் செயல்பட வேண்டிய சூழலில் இருக்கிறோம் என்று தெரிவித்தார்

பாஜகவுக்கு எதிரான இண்டியா கூட்டணி கட்சிகள் டெல்லியில் ஒன்றுகூடி ஆலோசனை நடத்த உள்ளன. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

===============

logo
Thamizh Alai
www.thamizhalai.in