

ரஃபேல் போர் விமானங்கள்
Rajnath Singh-Led DAC Clears Rs 3.25 Lakh Crore Proposal To Acquire 114 Rafale Fighter Jets : பிரான்சில் நாட்டில் தயாரிக்கப்படும் அதிநவீன ரஃபேல் விமானப்படையின் ஹீரோ என்று வர்ணிக்கப்படுகிறது. இந்தியாவிற்கு ஏற்கனவே 36 ரஃபேல் போர் விமானங்களை பிரான்ஸ் விற்பனை செய்து இருக்கிறது.
114 போர் விமானங்கள் கொள்முதல்
இந்திய விமானப்படையின் மல்டி-ரோல் போர் விமானத் திட்டத்திற்காக 114 பிரெஞ்சு தயாரிப்பான ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ரூ.3.25 லட்சம் கோடிக்கு ஒப்பந்தம் மேற்கொள்ள இந்தியா முடிவு செய்தது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் டெல்லி வருகைக்கு சில நாட்களே இருக்கிறது. அதற்குள் இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய இந்தியா முடிவு செய்தது.
இந்தியாவில் ஆயுதங்கள் தயாரிப்பு
இந்த ஒப்பந்தம் இந்தியாவின் மிகப்பெரிய ஆயுத ஒப்பந்தமாக மட்டுமின்றி, , இந்தியாவில் சுமார் 100 ஆயுதங்களை தயாரிப்பதற்கான ஏற்பாடுகளையும் உள்ளடக்கும்.
இதில் உயர்தர போர் ஜெட் தொழில்நுட்பத்தை மாற்றுவதும், 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தை மேம்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகவும் அது அமையும்.
எதிரிகளுக்கு சிம்மசொப்பனம்
இரட்டை எஞ்சின் கொண்ட, ரஃபேல் போர் விமானங்களை அதிகம் கொண்டிருக்கும் நாடாக இந்தியா மாறும். உலகின் மிகவும் ஆபத்தான போர் விமானங்களில் ஒன்றாக கருதப்படும் ரஃபேல், வான் மேன்மை மற்றும் துல்லியமான தாக்குதல் பணிகளில் நிபுணத்துவம் வாய்ந்தது.
இந்தியாவிடம் ரஃபேல் போர் விமானங்கள்
இந்தியாவிடம் ஏற்கனவே 36 ரஃபேல் விமானங்கள் உள்ளன - விமானப்படை கடைசி 'சி' வகையை டிசம்பர் 2024ல் டெலிவரி செய்தது
மேலும் ரூ.63,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் 26 கடற்படை வகைகளான 'எம்' பதிப்பை ஆர்டர் செய்துள்ளது.
பாதுகாப்பு வாரியம் அனுமதி
அந்த வகையில் 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்க பாதுகாப்பு கொள்முதல் வாரியம் அனுமதி வழங்கி இருக்கிறது. 2030 ஆம் ஆண்டுக்குள் இவை இந்தியாவிடம் ஒப்படைக்கபடும்.
ரஃபேல் விமானங்கள், ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா ஆகிய விமானம் தாங்கிக் கப்பல்களில் நிலைநிறுத்தப்படும்.
ரஃபேலின் இந்திய அனுபவம்
கடந்த ஆண்டு மே மாதம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரிலும், லடாக்கிலும் ரஃபேல் போர் விமானங்கள் பங்கேற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
===