மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகை : பட்ஜெட்டில் நல்ல செய்தி!

ரயில் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டு இருக்கும் மூத்த குடிமக்கள் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில், மீண்டும் கட்டண தள்ளுபடி வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
Senior citizens, affected by rail fare hike, eagerly awaiting return of fare concessions in Union Budget 2026 2027
Senior citizens, affected by rail fare hike, eagerly awaiting return of fare concessions in Union Budget 2026 2027IRCTC
1 min read

பிப்வரி 1 - மத்திய பட்ஜெட் தாக்கல்

Withdrawn Fare Concession for Senior Citizens in Union Budget 2026 - 2027 : 2026-27ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ம் தேதி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் மீது பல்வேறு தரப்பினரும் எதிர்பார்ப்புகளை முன்வைத்து காத்துக் கிடக்கின்றனர்.

ரயில் கட்டணம் சற்று அதிகரிப்பு

அண்மையில், ரயில் பயண கட்டணங்கள் சிறிதளவு உயர்த்தப்பட்டன. ஏற்கனவே, கட்டண தள்ளுபடி இல்லாமல் இருக்கும் மூத்த குடிமக்களை இந்த கட்டண உயர்வு, சிரமத்தில் ஆழ்த்தி வருகிறது.

215 கிலோ மீட்டருக்கு மேல் பயணங்களுக்கு ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு, நிலையான வருமானம் இல்லாத முதிய பயணிகளுக்கு நேரடி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

2019 வரை கட்டண சலுகை

2019ம் ஆண்டு வரை 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 40% தள்ளுபடியும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50% தள்ளுபடியும் வழங்கப்பட்டது. ராஜதானி, சதாப்தி, துரந்தோ போன்ற ரயில்களிலும் இந்தச் சலுகை அமலில் இருந்தது. இதனால் நீண்ட தூர பயணம் முதியோருக்கு எளிதாக இருந்தது.

கொரோனாவால் சலுகை ரத்து

2020ல் கொரோனா பரவல் காரணமாக, இந்தச் சலுகை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பயணிகள் எண்ணிக்கை குறைந்து விட்டதால், நிதிநிலை பாதிக்கப்பட்டதாக கூறி சலுகையை மத்திய அரசு நிறுத்தியது. இப்போது நிலைமை மாறி, ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஆனால், கட்டண சலுகை திரும்ப வழங்கப்படவில்லை.

மத்திய பட்ஜெட் - மூத்த குடிமக்கள் காத்திருப்பு

எனவே, மத்திய பட்ஜெட்டில் ரயில் கட்டச சலுகை தொடர்பான அறிவிப்பு இடம்பெறும் எனத் தெரிகிறது. மூத்த குடிமக்களுக்கு ரயில் டிக்கெட் தள்ளுபடி மீண்டும் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. எனவே, பட்ஜெட் அறிவிப்புகளை எதிர்பார்த்து கோடிக்கணக்கான மூத்த குடிமக்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

===============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in