
இந்தியாவில் 1975ல் எமர்ஜென்சி :
Congress MP Shashi Tharoor About Emergency : ஜூன் 25, 1975ம் ஆண்டு இந்திய வரலாற்றில் கருப்பான நாள். ஆம் அன்றைய தினம்அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. aவரது உத்தரவின் பேரில் ஜனாதிபதி ஃபக்ருதீன் அலி அகமது இந்த அறிவிப்பை வெளியிட்டார். இது பின்னர் மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது.
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் 'இருண்ட காலம்' என்று அழைக்கப்பட்ட அவசரநிலை பிரகடனம் 21 மாதங்கள் வரை நீடித்தது. அனைத்து தரப்பு மக்களுக்கும் பல்வேறு வகையில் அநீதிகள் இழைக்கப்பட்டன. அவசரநிலை பிறக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டது.
மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி :
இந்தநிலையில், எமர்ஜென்சி குறித்து, மலையாள தினசரி நாளிதழுக்கு காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் எழுதி உள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது, “எமர்ஜென்சியின் போது மனித உரிமை மீறல்களின் கொடூரமான சம்பவங்களை உலகம் எவ்வாறு அறியாமல் இருந்தது ஆச்சரியம்தான்.
சித்திரவதை மற்றும் நீதிக்குப் புறம்பான கொலைகள் நடந்தன. இந்திரா கடுமையான நடவடிக்கைகள் அவசியம் என்று வலியுறுத்தினார். பத்திரிகையாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சஞ்சய் காந்தி இழைத்த தவறுகள் :
எமர்ஜென்சியின் போது இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தியின் அட்டூழியங்களில் ஈடுபட்டார். குறிப்பாக ஏழைகள் அப்பாவி மக்கள் வசித்த பகுதிகளில் ஆண்களுக்கு கட்டாயமாக கருத்தடைகள் செய்யப்பட்டன. இதற்காக நடத்தப்பட்ட முகாம்களும் சித்ரவதை கூடங்களை நினைவுபடுத்தின.
டெல்லி உள்ளிட்ட பெருநகரங்களில் குடிசை பகுதிகள் ஈவு இரக்கமின்றி அழித்தொழிக்கப்பட்டன. பல்லாயிரக் கணக்கானோர் வீடுகளை இழந்து அகதிகளாகினர்.
எமர்ஜென்சிக்கு பிறகு இந்தியா கணிசமாக வளர்ச்சி அடைந்துள்ளது. அதிக தன்னம்பிக்கை கொண்டதாக மாறி வருகிறது. பல விஷயங்களில் வலுவான ஜனநாயகமாக மாறி வருகிறது. எனவே, இன்றைய இந்தியா 1975ம் ஆண்டு இந்தியா அல்ல.
மாறி வரும் இந்தியா :
ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். அனைத்து தலைவர்களும் விழிப்புடன் செயல்பட வேண்டும். குறிப்பாக ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்திய வரலாற்றில் ஒரு இருண்ட அத்தியாயமாக மட்டும் நினைவில் கொள்ளக்கூடாது, மாறாக அதன் சிக்கல்களையும், கற்றுக்கொடுத்த பாடங்களையும் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு சசி தரூர் கூறியுள்ளார்.
ஜனநாயகத்தை பாதுகாக்க விழிப்புணர்வு தேவை :
ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். அனைத்து தலைவர்களும் விழிப்புடன் செயல்பட வேண்டும். குறிப்பாக ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்திய வரலாற்றில் ஒரு இருண்ட அத்தியாயமாக மட்டும் எமர்ஜென்சியை நினைவில் கொள்ளக்கூடாது, மாறாக அதன் சிக்கல்களையும், கற்றுக்கொடுத்த பாடங்களையும் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும்” இவ்வாறு சசி தரூர் கூறியுள்ளார்.
======