
இந்தியாவில் ஐ.டி. துறை வளர்ச்சி :
IT Employees Layoffs Affect Real Estate : 2000-மாவது ஆண்டில் ஐடி எனப்படும் தகவல் தொழில் நுட்பத்துறை அசுர வளர்ச்சியை பெற்றது. இதன் காரணமாக இந்தியாவில் ஐடி நிறுவனங்கள் கால்பதிக்க வேலைவாய்ப்பும் அதிகரித்தது. பல்லாயிரக் கணக்கான இளைஞர்களும், இளைஞிகளும் நல்ல ஊதியத்தில் பணி வாய்ப்பு பெற்று, குறுகிய காலத்தில் முன்னேற்றம் கண்டனர்.
ஐடி.யை பாதிக்கும் ஏஐ தொழில்நுட்பம் :
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் ஐடி வேலைவாய்ப்புக்கு(AI Technology) வேட்டு வைக்க தொடங்கி இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு நுழைவு வேலை வாய்ப்புகளை பறிக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக ஐடி நிறுவனங்கள் பின்னோக்கி தள்ளப்படும் நிலைக்கு வந்திருக்கின்றன.
ஆள்குறைப்பில் TCS நிறுவனம் :
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்ஸி சர்வீஸ் (TCS Layoffs) தன்னுடைய நிறுவன ஊழியர்களில் 2 சதவீதம் பேரை வீட்டுக்கு அனுப்ப முடிவு எடுத்திருக்கிறது. சதவீதத்தில் பார்த்தால் மிக குறைவாக தெரிந்தாலும், 12,000 ஊழியர்கள் வேலையை இழக்க இருக்கின்றனர்.
ரியல் எஸ்டேட் துறைக்கு பாதிப்பு :
டிசிஎஸ் பணி நீக்கம்(TCS Layoff) என்பது ஆரம்பம்தான், இனி மற்ற நிறுவனங்களும் இதை கையில் எடுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இது ரியல் எஸ்டேட் துறையை தள்ளாட வைக்கப் போகிறது. குறிப்பாக பெரு நகரங்களில் ரியல் எஸ்டேட் துறை ஐடி ஊழியர்களை பெரிய அளவில் நம்பி இருக்கிறது. நடுத்தர மற்றும் உயர் வகுப்பு வீடுகளை ஐடி ஊழியர்கள்தான் பெரும்பாலும் வாங்குகின்றனர். இவர்களின் வேலைக்கு உத்தரவாதம் இல்லா விட்டால், இனி வீடு வாங்க தயக்கம் காட்டுவார்கள், எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க : ZOHO நிறுவனத்தில் வேலை : தமிழ்நாட்டில் பணி நியமனம்
ஏஐ தொழில்நுட்பம் வந்தாலும், இந்தியாவில் ஐடி துறை வளர்த்து கொண்டே வருகிறது என்கின்றனர் ஒருசாரார். பணி நீக்கம் இருந்தாலும், வேலை வாய்ப்புகளும் உருவாகி வருவதால், பாதிப்பு குறைவாகவே இருக்கும் என்பது இவர்களின் கணிப்பாக உள்ளது.
=============