ஓராசியரக்ளுடன் இயங்கும் பள்ளி, வெளியானது அதிர்ச்சி தகவல்
நாடு முழுவதும் ஓராசிரியர்களுடன் இயங்கும் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான பள்ளிகள் இயங்கி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு இந்த புள்ளி விவரத்தை வெளியிட்டு உள்ளது ,குறிப்பாக இந்த அமைப்பானது, நாட்டில் உள்ள பள்ளிகளை பற்றிய ஒரு தரவுத்தளம் ஆகும். மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள பள்ளிக் கல்வித்துறையால் உருவாக்கப்பட்டதேயாகும்
ஓராசிரியர்களுடன் பள்ளிகள், ஆந்திராவிற்கு முதலிடம்
நாடு முழுவதும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வரும் நிலையில் ஆந்திராவில் மட்டும் அதிகபட்சமாக 16,357 பள்ளிகளில் ஓராசிரியர் மட்டும் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது
மொத்தம் ஓராசிரியர் பள்ளிகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 843
மேற்கண்ட அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 2025-26ம் ஆண்டில் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் பற்றிய தரவுகளை வெளியிட்டிருக்கும் நிலையில் , அதில் மொத்தமாக 1 லட்சத்து 843 பள்ளிகள் ஓராசிரியர்களுடன் பள்ளிகள் இயங்கி வருவதாக தெரிவித்துள்ளது
அதிகபட்சமாக 16,357 பள்ளிகள் ஒரு ஆசிரியருடன் அந்திரா முதலிடத்திலும் மொத்த தேசிய சராசரியில் இது 16க்கும் அதிகமான சதவீதம் என்று தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மாநிலங்கள் வாரியான ஓராசிரியர் பள்ளிகள் விவரம்
ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி , ஜார்க்கண்ட், மஹாராஷ்டிரா முறையே 2 மற்றும் 3வது இடத்தில் உள்ளதாகவும் ,ஜார்க்கண்டில் 9,827 பள்ளிகளும்,
மஹாராஷ்டிராவில் 9,269 பள்ளிகளிலும் ஓராசிரியர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது , கர்டகாவில் 8,042, உத்தரபிரதேசத்தில் 7,874, ராஜஸ்தானில் 7,200, மேற்கு வங்கத்தில் 6,769 பள்ளிகள் ஓராசிரியருடன் இயங்கி வருகின்றன. இந்த 7 மாநிலங்களும் ஒட்டு மொத்த தேசிய சராசரியில் 65 சதவீதமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் 3,957 ஓராசிரியர் பள்ளிகள்
தமிழகத்தில் மட்டும் இதுவரை 3,957 ஓராசிரியர் பள்ளிகள் இயங்கி வருவதாகவும் , தெலுங்கானாவில் 4,793 ஓராசிரியர் பள்ளிகளும் ,அசாமில் 3,159 பள்ளிகள் ஓராசிரியர்களுடன் இயங்கி வருவதாக தெரிவித்துள்ளது , ஹிமாச்சலில் 3,128, உத்தராகண்டில் 2,655, சத்தீஸ்கரில் 2,461 பள்ளிகள் ஓராசிரியர்கள் இடம்பெற்றுள்ளனர்.
மிக குறைவான எண்ணிக்கையில் இயங்கும் ஓராசிரியர் பள்ளிகள்
கேரளாவில் 67 ஓராசிரியர் பள்ளிகள் உள்ளன. நாகாலாந்தில் 35, சிக்கிமில் 31, லடாக்கில் 28, டில்லியில் 7 மற்றும் அந்தமான் நிகோபர் தீவில் 1 பள்ளியும் ஓராசிரியருடன் இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கேள்விகுறியாகும் கல்வி நிலை
இந்த சூழலில் இந்தியா முழுவதும் கல்வி தரத்தின் நிலை , மானவ்ர்களின் கல்வி நிலை கேள்விகுறையாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது , இது கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆரவலரகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
=========================