

SIR பணிகள் :
SIR Draft Voter List 2026 Uttar Pradesh : தமிழகம், புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று இறந்தவர்கள், இரட்டை வாக்குரிமை இருப்பவர்கள் உள்ளிட்டவர்கள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.
உ.பி. 2,89 கோடி பேர் நீக்கம்
இதேபோன்று உத்தர பிரதேசத்திலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. மொத்த வாக்காளர்களில் 18.70% பேர், அதாவது 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
தலைகீழான வாக்காளர் பட்டியல்
இதன் காரணமாக உத்தரப் பிரதேசத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கை 12.55 கோடியாகக் குறைகிறது. குறிப்பாக 46 லட்சம் பேர் மரணம் அடைந்து விட்டதாக கூறி, அவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு இருக்கின்றன.
2.17 கோடி வாக்காளர்கள் நிரந்தரமாக இடம்மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். 25.46 லட்சம் பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியல்
இதன் மூலம் 15.44 கோடியாக இருந்த உத்தரப் பிரதேச வாக்காளர்களின் எண்ணிக்கை, 12.55 கோடியாகக் குறைந்துள்ளது(SIR Draft Voter List 2026 Uttar Pradesh). இந்த தகவலை உத்தரப்பிரதேச மாநில தலைமை தேர்தல் ஆணையர் நவ்தீப் ரின்வா வெளியிட்டுள்ளார்