SIR , சிறப்பு தீவிர திருத்தப்பணி , ஓராண்டு நிறைவு
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி எனப்படும் SIR தொடங்கப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது. 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் ,இதுவரை சுமார் 6 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது
SIR , சிறப்பு தீவிர திருத்தப்பணி என்பது
சிறப்பு வாக்காளர் திருத்தத்தின் முக்கிய நோக்கம், பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாத வாக்காளர் பட்டியல்களில் உள்ள தவறுகளை நீக்குதல், இறந்தவர்கள் அல்லது முகவரி மாற்றியவர்கள் போன்றோரின் பெயர்களை அகற்றுவது என தேர்தல் ஆணையம் விளக்கி இருக்கிறது.
12 மாநிலங்களில் சிறப்பு திருத்த பணி
இந்நிலையில், தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை தேர்தல் ஆணையம் ஏற்கனவே நடத்தி முடித்து விட்டது.
SIR திருத்த பணி :கடும் எதிர்புகள்
இதற்கு திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக, வாக்காளர் பெயர்கள் “அரசியல் நோக்கத்துடன்” நீக்கப்படக்கூடும் என்ற அச்சம் கட்சிகளிடையே நிலவியது.
தமிழகம் மட்டும் அல்லாது, மேற்குவங்கத்திலும் இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்திருந்தது ,இந்த பணி எதிர்க்கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் இடையே கருத்து மோதல்களை உருவாக்கியுள்ளது.
மேற்குவங்கத்தில் நீக்கப்பட்ட 65லட்சம் வாக்காளர்கள்
வாக்காளர் பட்டியலை சீரமைக்கும் சிறப்பு தீவிரத் திருத்தப்பணி முன்னோடித் திட்டம் கடந்த ஆண்டு ஜூன் 24ம் தேதி பீகாரில் முதன்முறையாக தொடங்கப்பட்டது.
குறிப்பாக இந்த சிறப்பு தீவிரத் திருத்தப் பணிக்கு பின், அங்கு சுமார் 65லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.
ஆவணங்கள் இல்லாத காரணத்தை காட்டி குடிமக்களின் வாக்குரிமையை பறிக்க பாஜவின் தூண்டுதலின் பேரில் தேர்தல் ஆணையம் செயல்படுவதாக எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் அப்போது குற்றம்சாட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது
இரண்டாம் கட்ட சிறப்பு திருத்தப் பணி
கடந்த ஆண்டு அக்டோபர் 27ம் தேதி அறிவிக்கப்பட்ட இந்த பணியின் இரண்டாம் கட்ட சிறப்பு திருத்தப்பணியில் மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, ராஜஸ்தான், சட்டீஸ்கர், கேரளா, புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள், லட்சத்தீவு, குஜராத், மத்தியப்பிரதேசம் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் 10.2சதவீதம் குறைக்கப்பட்டது.
இங்கு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு முன்னதாக இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 50.99கோடியாக இருந்தது. பணிக்கு பின் 45.81கோடியாக உள்ளது. 5.18கோடிக்கும் அதிகமானோர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.
என்சிஇஆர்டி புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் எஸ்ஐஆர் திட்டம்
என்சிஇஆர்டியின் 9ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர மறுஆய்வு திட்டம் குறித்த பாடம் இடம்பெற்றுள்ளது.
அப்படப்புத்தகத்தில் பயனுள்ள எந்தவொரு குடிமகனும் வாக்காளர் பட்டியலில் விடுபடாமல் இருப்பதையும், தகுதியற்ற எவரும் அதில் சேர்க்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்வதற்கான ஒரு நடவடிக்கையாக இந்த திட்டம் விவரிக்கப்பட்டுள்ளது.
மேலும் போலிச்செய்திகள், தவறான தகவல்கள், மிரட்டல்கள் போன்ற சவால்களுக்கு மத்தியில் நடுநிலையான தேர்தல்களை நடத்தியதற்காக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு புத்தகத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.
==========================