வறுமையிலிருந்து 50 கோடி இந்தியர்கள் மீட்கப்பட்டதை ஏற்க சிலருக்கு மனம் வரவில்லை : பிரதமர் மோடி !

மகத்தான சாதனையை ஏற்றுக்கொள்ளத்தான் சிலருக்கு மனம் வரவில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
pm modi speech
pm modi speechsource:ai generated
1 min read

Some are unwilling to accept that 500 million people have been lifted out of poverty: Prime Minister Modi!

மத்திய பாஜக அரசின் கொள்கைகள் மற்றும் முயற்சிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி தான் நாட்டில் 50 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டது. இந்த மகத்தான சாதனையை ஏற்றுக்கொள்ளத்தான் சிலருக்கு மனம் வரவில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி பதிலடி

உலக வங்கி சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில், இந்தியாவில் கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் தீவிர வறுமையில் இருந்து சுமார் 50 கோடி பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது. இதற்கு எதிர்க்கட்சியினர் பல விமர்சங்களை முன்வைத்திருந்த நிலையில், பிரதமர் மோடி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

பிரதமர் மோடி உரை

பாஜக சார்பில் நேற்று ( 22-11-2026) குஜராத்தின் 182 தொகுதிகளிலும் ’நட்பு சந்திப்பு’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது அவர், ஆயிரம் ஆண்டுகால அடிமைத்தனம் நம்மை வறுமையில் தள்ளியது. அந்த அடிமைத்தனத்தில் இருந்து மீண்ட பிறகு முதன்முறையாக 50 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர். இதைவிட மிகப்பெரிய சாதனையோ, திருப்தியோ இருக்க முடியாது என்று பிரதமர் மோடி பேசினார்.

சாதனையை ஏற்க சிலருக்கு மனம் வரவில்லை

தொடர்ந்து பேசிய அவர், இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டு போராடி உயிர்நீத்த அனைவரது ஆன்மாக்களும் இப்போது மகிழ்ச்சியில் திளைக்கும். இருந்தாலும் பாஜக அரசின் இந்த மகத்தான சாதனையை சிலருக்கு ஏற்க மனமில்லை. பாஜக ஆட்சி காலத்தில் இது சாத்தியமாகியுள்ளதால் அவர்களால் ஏற்க விரும்பவில்லை என்றார்.

எதிர்கால தலைமுறையினருக்கு பொற்காலம்

அவர்கள் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி, நமது முயற்சிகளுக்கு கைமேல் பலன் கிடைத்துள்ளதே நமக்கு பரம திருப்தி. இந்திய மக்களின் வாழ்வில் இதன் மூலம் புதிய அத்தியாயம் பிறந்துள்ளது.

50 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டது எப்படி சாத்தியமானது?

  • ஏழைகளுக்கு புதிய வங்கி கணக்குகள்

  • ஏழைக் குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்புகள்

  • இலவச மருத்துவக் காப்பீடு

  • அனைத்து வீடுகளுக்கும் மின்விநியோகம்

இப்படி ஒவ்வொரு திட்டங்களையும் செயல்படுத்திய போதும் எதிர்ப்புகள் இருந்து வந்தது. எனினும் எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து செயல்படுத்து வந்தோம். இதன் மூலம் பழங்குடியினர், பட்டியலினத்தவர், விளிம்புநிலை மக்கள்,பெண்கள் என பல தரப்பினரும் பயனடைந்தனர்.