”மருத்துவமனையில் சோனம் வாங்சுக்” : 21 நாட்கள் உண்ணாவிரதம், வெளியேற்றிய போலீசார் : ஆதரவாளர்கள் எதிர்ப்பால் பரபரப்பு...!

டெல்லையில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சோனம் வாங்சுக், போலீசாரால் வெளியேற்றப்பட்டு மருத்துவமனயைில் அனுமதிக்கப்பட்டார்.
Sonam Wangchuk, indefinite hunger strike in Delhi, removed by the police, admitted to a hospital
Sonam Wangchuk, indefinite hunger strike in Delhi, removed by the police, admitted to a hospitalAI generated
1 min read

தர்மேந்திர பிரதானுக்கு எதிராக போராட்டம்

NEET தேர்வு முறைகேடு விவகாரங்களுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டங்களை நடத்தி வருகிறது.

சோனம் வாங்சுக் உண்ணாவிரதம்

இந்த ஒற்றை கோரிக்கையை முன்வைத்து, காந்தியவாதி சோனம் வாங்சுக் டெல்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

இந்தப் போராட்டம் 21 நாட்கள் நீடித்தது. உடல் எடையும் 9 கிலோ குறைந்தது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு - மத்திய அரசு உறுதி

சில தினங்களுக்கு முன்பே அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. போராட்டத்தை கைவிட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவரது உடல்நிலையை கண்காணிக்க மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது.

மருத்துவரின் முடிவு அடிப்படையில் உண்ணாவிரத விவகாரத்தில் தலையிடுவோம் என மத்திய அரசு விளக்கம் அளித்தது.

மருத்துவமனையில் சோனம் வாங்சுக் அனுமதி

இந்நிலையில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உடல்நிலை, இன்று காலை மோசமனதால் அவரை டெல்லி காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

வலக்கட்டாயமாக வெளியேற்றம் - எதிர்ப்பு

அவரை வலுக்கட்டாயமாக்க போலீசார் வெளியேற்றி அழைத்து சென்றனர். அப்போது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.

அவரது உடல்நிலை சீராக இருந்தாலும், தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டிய தேவை இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

20ம் தேதி டெல்லியில் போராட்டம்

ஜூலை 20ம் தேதி வரை தான் உயிரோடு இருக்க வேண்டும், மழைக்கால கூட்டத்தொடர் துவங்கும் அன்று, கல்வி அமைச்சருக்கு எதிராக டெல்லியில் நடைபெறும் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்றும், சோனம் வாங்சுக் முன்னதாக தெரிவித்து இருந்தார்.

===============

logo
Thamizh Alai
www.thamizhalai.in