

வெளிநாட்டு முதலீடுகள்
Hwaseung Footwear Group Shoe Company in Andhra Pradesh : வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் மாநிலங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. வெளிநாட்டு முதலீடுகள் மூலம் பொருளாதர வளர்ஒரு ரூபாய்க்கு ஒரு ஏக்கர் திட்டம் காரணமாக தமிழகத்திற்கு வர இருந்த காலணி தொழிற்சாலை ஆந்திராவுக்கு செல்கிறது.
தென்கொரியா - ஹ்வாசியுங் நிறுவனம்
அந்த வகையில், தென் கொரியாவைச் சேர்ந்த பிரபல காலணி உற்பத்தி நிறுவனமான ஹ்வாசியுங்(Hwaseung Footwear Group) தமிழகத்தில் தொழில் தொடங்க திட்டமிட்டு இருந்தது. உலகின் பிரபலமான பிராண்டான அடிடாஸின் முக்கிய சப்ளையர்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது இந்த நிறுவனம் ஸ்போர்ட்ஸ் காலணிகளை உற்பத்தி செய்வதில் முன்னணியில் இருக்கிறது.
தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் தனது உற்பத்தி ஆலையை ரூ.1,720 கோடி முதலீட்டில் தொடங்கவும், 20,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், ஆகஸ்ட் மாதம் தமிழக அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்த நிறுவனம் கையெழுத்திட்டிருந்தது.
ஆந்திராவுக்கு செல்லும் ஹ்வாசியுங்
இந்தநிலையில், ஹ்வாசியுங் நிறுவனம் தனது முடிவை மாற்றி, ஆந்திரப் பிரதேசத்தில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த சட்டமன்றத் தொகுதியான குப்பம் பகுதியில் 100 ஏக்கர் நிலம் காலணி தொழிற்சாலை நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இங்கு ஆண்டுக்கு சுமார் 2 கோடி ஜோடி விளையாட்டு காலணிகள் உற்பத்தி செய்யப்படும்.
சிவப்பு கம்பளம் விரிக்கும் ஆந்திரா
திருநெல்வேலியில் அமைய வேண்டிய தொழிற்சாலை ஆந்திராவுக்கு செல்ல முக்கிய காரணம் என்னவென்று பார்த்தால், ஒரு ஏக்கர் ஒரு ரூபாய்: ஒரு ஏக்கர் ஒரு ரூபாய் என்று தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் ஆந்திர அரசின் சலுகைகள் தான்.
ஏராளமான வேலைவாய்ப்பு மற்றும் பல கோடி முதலீடுகளுடன் வரும் நிறுவனங்களுக்கு சந்திரபாபு நாயுடு அரசு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது. அந்த வகையில் தகுதியுடைய மெகா திட்டங்களுக்கு, ஒரு ஏக்கர் நிலத்தை ஒரு ரூபாய்க்கு தருகிறது.
குப்பம் தேர்வு எதற்காக?
குப்பம் தொகுதி என்பது கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில், சென்னை பெங்களூரு புதிய தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்து இருக்கிறது. இங்கு தொழிற்சாலை தொடங்கினால், சென்னை வழியாக எளிதில் ஏற்றுமதி செய்ய முடியும்.
ஏற்கனவே ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்கள் தோல் தொழிற்சாலைகள், காலணி தொழிற்சாலைகளுக்கு பெயர் போனவை. காலணி தொழிற்சாலை அமைக்கும் போது, தொழிலாளர் பிரச்சினையும் வராது என்று கணக்கு போட்டே ஆந்திர அரசு குப்பத்தில் தொழிற்சாலை அமைக்க இடம் கொடுத்து இருக்கிறது.
திட்டமிடலில் சாணக்கியர் நாயுடு
ஹ்வாசியுங் நிறுவனம் அதிக தொழிலாளர்கள், அதிலும் வேலை தெரிந்தவர்கள் தேவை என்பதில் உறுதியாக இருக்கிறது. அந்த வகையில் குப்பம் 100 சதவீதம் சரியான தேர்வு, இதில் முதல்வர் சந்திரபாபு நாயுடு வெற்றி பெற்று விட்டார் என்றே கூறலாம்.
தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீடு, ஆந்திராவிற்கு போனதற்கு ஒரு ரூபாய்க்கு ஒரு ஏக்கர் என்ற ஆந்திராவின் சலுகை முக்கிய காரணமாக கூறப்பட்டாலும், திட்டமிட்டு தெலுங்கு தேசம் அரசு செயல்பட்டதே இந்த வெற்றிக்கு காரணம். ஏற்கனவே, கூகுள் நிறுவனம் விசாகப்பட்டினத்தில் பிரமாண்ட ஏஐ நிறுவனத்தை அமைக்க இருப்பது நினைவு கூரத்தக்கது.
====