”எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள்” : தீபாவளிக்கு ஊர்களுக்கு செல்வோருக்கு குட்நியூஸ் : தெற்கு ரயில்வே அறிவிப்பு

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து புறப்படும் 10 எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கும் என்ற மகிழ்ச்சியான செய்தியை அறிவித்து இருக்கிறது தெற்கு ரயில்வே.
Southern Railway announced  additional coaches will be attached to 10 express trains departing from Chennai
Southern Railway announced additional coaches will be attached to 10 express trains departing from Chennai source:thamizhalai,ai generated
2 min read

எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

தெற்கு ரயில்வே வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், “சென்னை சென்ட்ரல் - கோவை இடையே இருமார்க்கமாக இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (வண்டி எண்.12243/12244), வருகிற 6, 7, 9, 11 ஆகிய தேதிகளில் கூடுதலாக ஒரு இருக்கை வசதி கொண்ட பெட்டி இணைத்து இயக்கப்பட இருக்கிறது.

தாம்பரம் -கொல்லம்

தாம்பரத்திலிருந்து கொல்லம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (16101), இன்று (5-ந்தேதி) மற்றும் 10 ஆகிய தேதிகளிலும், மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (16102), வருகிற 6, 11 ஆகிய தேதிகளிலும் கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி இணைத்து இயக்கப்பட இருக்கிறது.

எழும்பூர் - கொல்லம்

சென்னை எழும்பூரில் இருந்து கொல்லம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (20635), இன்று (5-ந்தேதி) மற்றும் 12 ஆகிய தேதிகளிலும், மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (20636), வருகிற 6, 13 ஆகிய தேதிகளிலும் கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி இணைத்து இயக்கப்படும்.

தஞ்சாவூர் - சென்னை

தஞ்சாவூரில் இருந்து சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (16866), வருகிற 11-ந்தேதி வரையிலும், சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (16865), வருகிற 7, 11 ஆகிய தேதிகள் வரையிலும் கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி இணைத்து இயக்கப்பட இருக்கிறது.

எழும்பூர் - மங்களூரு

சென்னை எழும்பூரில் இருந்து மங்களூரு சென்ட்ரல் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (16159), இன்று (5-ந்தேதி) முதல் 7-ந்தேதி வரையிலும், மறுமார்க்கமாக, மங்களூரு சென்ட்ரலில் இருந்து சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (16160), வருகிற 6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரையிலும் கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி இணைத்து இயக்கப்பட இருக்கிறது..

தாம்பரம் - ராமேஸ்வரம்

தாம்பரம்- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் (16103), வருகிற 10-ந்தேதி வரையிலும், மறுமார்க்கமாக, ராமேஸ்வரம்-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் (16104), இன்று (5-ந்தேதி) முதல் 10-ந்தேதி வரையிலும் கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி இணைத்து இயக்கப்பட இருக்கிறது.

சென்னை சென்ட்ரல் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் (22639), இன்று (5-ந்தேதி), 6, 8, 9 ஆகிய தேதிகளிலும், மறுமார்க்கமாக, ஆலப்புழா-சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயிலில் (22640), வருகிற 6, 7, 9, 10 ஆகிய தேதிகளிலும் கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி இணைத்து இயக்கப்பட இருக்கிறது.

சென்னை சென்ட்ரல்-மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் (12007), வருகிற 10, 11 ஆகிய தேதிகளிலும், மறுமார்க்கமாக, மைசூர்-சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயிலில் (12008), வருகிற 10, 11 ஆகிய தேதிகளிலும் கூடுதலாக ஒரு இருக்கை வசதி பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளது.

ராமேசுவரம்-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் (16780), வருகிற 6, 8, ஆகிய தேதிகளிலும், மறுமார்க்கமாக, திருப்பதி-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் (16779), வருகிற 7, 9 ஆகிய தேதிகளிலும் கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி இணைத்து இயக்கப்பட இருக்கிறது" என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக 10 எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பயணிகள் பயணிக்க முடியும்.

==================