தொடங்கியது தென்மேற்கு பருவமழை , இந்திய வானிலை மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பெரும்பான்மை மாநிலங்கள் இந்த தென்மேற்கு பருவமழையின் மூலம் அதிக மழையை பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Southwest monsoon has begun, official announcement by the India Meteorological Department
googleSouthwest monsoon has begun, official announcement by the India Meteorological Department
1 min read

தொடங்கியது தென்மேற்கு பருவமழை

கேரளாவில் தென்மேற்கு பருவமழையானது தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

இது குறித்து இந்திய வானிலை மையம் தெரிவித்திருப்பதாவது

இது குறித்து வானிலை மையம் தெரிவித்துள்ளதுப்படி , தென்மேற்கு, தென்கிழக்கு அரபிக் கடல், லட்சத்தீவுகள், கேரளத்தின் சில பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தொடங்கி உள்ளதாகாவும் , இந்த மழையானது பல மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்குகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது

பல மாநிலங்களுக்கு நீர் ஆதாரம் : தென்மேற்கு பருவ மழை

குறிப்பாக தென்மேற்கு பருவமழையானது நாட்டின் பல மாநிலங்களுக்கான விவசாயத்திற்கான தண்ணீர் ஆதாரமாக விளங்குகிறது , ஒரு மாநிலத்தில் அதாவது இந்த மழையானது கேரளத்தில் பெய்தாலும், ஆறுகள் வழியாக அண்டை மாநிலங்களும் பயன்பெறும் என்பதால், இந்த் தென்மேற்கு பருவமழையானது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது

எதிர்பார வெப்பநிலை ஏற்படலாம்

இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் ஜூன்-செப்டம்பர்பெரும்பாலான பகுதிகளில் சராசரிக்கும் குறைவான மழைப்பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதோடுமட்டுமல்லாமல் , அதிக வெப்ப ஆண்டாக வரும் 2026 முதல் 27 ஆண்டாந்து எல் நினோ ஆண்டாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது

இது எதிர்ப்பார வெப்ப அலை விளைவினால கடுமையான பாதிப்புகள் உயிரிழப்புகள் போன்றவை ஏற்படும் என்று எச்சரித்து இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தகது

இந்தியா அதிக அளவிலான வெப்பநிலையை சந்திக்க கூடும்

குறிப்பாக உலகள்வில் இந்திய நாடனது வெப்ப அலையால் கடுமையாக பாதிக்ககூடும் என பல வானிலை அமைப்புகளும் இந்திய வானிலை மையமுன் தெரிவித்துள்ளது .

குறிப்பாக இந்தியாவில் உபி மாநிலத்தின் பண்டா நகரமானது அதிகளவிலான வெப்ப நகரம் என்ற பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருந்தது

சாரசரி மழைப்பொழிவு விகிதம் கூறுவது

நீண்டகால சராசரி மழைப்பொழிவு என்பது குறிப்பிட்ட பகுதியில் மாதம் அல்லது பருவகாலம் என ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் (30 ஆண்டுகள் முதல் 50 ஆண்டுகள் வரையில்) பதிவாகும் சராசரி மழைப்பொழிவாகும். இந்தியாவில் 1971 முதல் 2020 வரையிலான நீண்ட கால சராசரி மழைப்பொழிவு 87 சதவீதமாக பதிவாகியுள்ளது.

=================

logo
Thamizh Alai
www.thamizhalai.in