சவுமியா சுவாமிநாதன் : லண்டன் ராயல் சொசைட்டி உறுப்பினராக கௌரவம் : கோவிட் காலத்தில் சிறப்பான செயல்பாடு!

லண்டனை தலைமையிடமாகக் கொண்ட ராயல் சொசைட்டி (Royal Society), உலகின் பழமையான அறிவியல் அகாடமிகளில் ஒன்றாகும்.
Sowmiya Swaminathan, a Fellow of the Royal Society of London, p
Sowmiya Swaminathan, a Fellow of the Royal Society of London, pgoogle
1 min read

லண்டன் ராயல் சொசைட்யின் கவுரவம்

லண்டனை தலைமையிடமாகக் கொண்ட ராயல் சொசைட்டி (Royal Society), உலகின் பழமையான அறிவியல் அகாடமிகளில் ஒன்றாகும் .இதில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவது கவுரவமாகும்.

இதன் உறுப்பினராக தமிழகத்தைச் சேர்ந்தவரும், உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானியான சவுமியா சுவாமிநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கவுரவத்தை பெறும் இரண்டாவது பெண்

ராயல் சொசைட்டியின் 365 ஆண்டு கால வரலாற்றில், பேராசிரியர் ககன்தீப் காங்கிற்குப் பிறகு இந்த கவுரவத்தைப் பெறும் இரண்டாவது இந்தியப் பெண் விஞ்ஞானி என்ற பெருமையையும் சவுமியா பெற்றுள்ளார்.

டாக்டர் சவுமியா சுவாமிநாதனின் பிண்ணனி

லண்டனில் ராயல் சொசைட்யின் கவுரவமானது நம் நாட்டின் பசுமை புரட்சியின் தந்தை என போற்றப்படும் எம்.எஸ்.சுவாமிநாதனின் மகள் டாக்டர் சவுமியா சுவாமிநாதன், 67. இவர், உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியாக பதவி வகித்து வந்தார் .

அதோடுமட்டுமல்லாமல் ஹெச்.ஐ.வி., காசநோய் உள்ளிட்ட நோய்களில் ஆராய்ச்சி மேற்கொண்டு சிறந்த பங்களிப்பை வழங்கி இருக்கிறார் சவுமியா சுவாமிநாதன்.

இவர் கோவிட் தொற்று காலத்தில் பெரும் சுகாதார நெருக்கடிகளைச் சமாளிப்பதில் முக்கிய பங்கை ஆற்றியுள்ளார்

ராயல் சொசைட்டி , இந்திய அறிவியலுக்கு கிடைத்த பெருமை

ராயல் சொசைட்டிக்கு சவுமியா சுவாமிநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டது, இந்திய அறிவியலுக்கும், உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் சுகாதாரத் தலைமைத்துவத்தில் நாட்டின் வளர்ந்து வரும் பங்களிப்பிற்கும் ஒரு பெருமைக்குரிய தருணமாகப் அனைவராலும் பாரக்கப்படுகிறது

உறுப்பினராக இவரது தந்தையும்

இவர் மட்டுமல்லாது இவரது தந்தையும் ராயல் சொசைட்டியின் உறுப்பினராக சவுமியாவின் த்ந்தையான எஸ்.எஸ், சுவாமிநாதனும் உறுப்பிநராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்ககது.

===============

logo
Thamizh Alai
www.thamizhalai.in