”சரயு-கமலா எக்ஸ்பிரஸ்” : ராமர்-சீதை பிறந்த இடங்களை இணைக்கும் ரயில் : ராமாயண சுற்றுலாவுக்கு வழிகாட்டும், ஆன்மீக பயணம்.!

ராமர் - சீதை அவதரித்தாக கருதப்படும் இடங்களை ரயில் சேவை மூலம் இணைக்கும் ஆன்மீக பயணம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
spiritual journey connecting places incarnations of Rama and Sita launched via rail service
spiritual journey connecting places incarnations of Rama and Sita launched via rail servicesource:thamizhalai,ai generated
1 min read

ராமர், சீதை பிறந்த இடங்கள்

ராமாயண இதிகாசத்தின்படி ராமர் பிறந்த இடமாக அயோத்தி போற்றப்படுகிறது. உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவிலும் அமைந்துள்ளது.

இதேபோல ராமரின் மனைவியான சீதை பிறந்த இடம் மிதிலை என்று அழைக்கப்படுகிறது. நேபாளத்தில் அமைந்துள்ள இந்தப் பகுதி இப்போது ஜனக்பூர் என்று அழைக்கப்படுகிறது.

ரயில்சேவை தொடக்கம்

ராமாயண சுற்றுலாவை வலுப்படுத்தும் ஆன்மீக நடவடிக்கையின் ஒரு பகுதியாக அயோத்தி - ஜனக்பூரை இணைக்கும் வகையில் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

கொடியசைத்த இருநாட்டு பிரதமர்கள்

பிரதமர் நரேந்திர மோடியும் நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவும் தில்லியில் இருந்து இன்று காணொலி வாயிலாக கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். அரசுமுறைப் பயணமாக டெல்லி வந்திருக்கிறார் பாலேந்திர ஷா.

சரயு - கமலா எக்ஸ்பிரஸ்

சரயு - கமலா எக்ஸ்பிரஸ் ரயிலானது வாரத்திற்கு ஒருமுறை இந்தியாவையும் நேபாளத்தையும் இணைக்கும் வகையில் இயக்கப்படுகிறது. இன்று அயோத்தி ரயில் நிலையத்தில் இருந்து முதல் சேவை தொடங்கியது.

வாராந்திர ரயில்

இந்த வாராந்திர ரயில் சேவை, உத்தரப் பிரதேசம், பிகாரின் முக்கிய நகரங்கள் வழியாக சுமார் 19 மணி நேரம் - 604 கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறது.

கோரக்பூர், பஸ்தி, ரக்ஸால், சீதாமர்ஹி, மதுபானி, ஜெயாநகர் ஆகிய இடங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் எட்டு குளிர்சாதன வசதி பெட்டிகளும், ஏழு ஸ்லீப்பர் பெட்டிகளும் உள்ளன.

வரும் 28 முதல் வழக்கமான பயணிகள் சேவை தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை மாலை 5.50 மணிக்கு அயோத்தியில் இருந்து புறப்பட்டு மறுநாள் செவ்வாய் நண்பகல் 12.40 மணிக்கு ஜனக்பூரைச் சென்றடையும்.

அதேபோல சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி பகல் 1.10 க்கு ஜனக்பூரில் இருந்து புறப்பட்டு ஞாயிறு காலை 8.10 மணிக்கு அயோத்தியை அடையும்.

==========