”CJP-யோடு கைகோர்க்கும் மாநில கட்சிகள்" : தேசிய அளவில் BJPக்கு எதிராக 3வது அணி? : கழற்றி விடப்படும் காங்கிரஸ்...!

இளைஞர்களை பெரிதும் ஈர்த்து வரும் கரப்பான் பூச்சி கட்சியோடு கைகோர்க்க திட்டமிட்டுள்ள மாநிலக் கட்சிகள், காங்கிரசை முழுமையாக கழட்டிவிட இருப்பதாக கூறப்படுகிறது.
State parties planning to join hands with the 'Cockroach Party' which is attracting  large number of young people
State parties planning to join hands with the 'Cockroach Party' which is attracting large number of young peopleAI generated
2 min read

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி

நீட் வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள் மற்றும் இளைஞர் வேலைவாய்ப்பின்மை ஆகிய விவகாரங்களை முன்னிறுத்தி நாடு முழுவதும் வெடித்துள்ள மாணவர்கள் போராட்டம் புதிய கட்டத்தை நோக்கி நகர்ந்து இருக்கிறது.

இந்திய அரசியலில் சிஜேபி

இந்திய அரசியலின் போக்கையே மாற்றக்கூடிய அளவுக்குப் புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி அமைப்பின் ஒருங்கிணைப்பில் நடந்து வரும் போராட்டங்களின் பின்னணியில், தேசிய அளவில் பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத ஒரு புதிய 3வது அணி உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

மாநிலக் கட்சிகள் ஆதரவு

மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல பிராந்தியக் கட்சிகள் தொடர்ந்து நேரடி ஆதரவு தெரிவித்து வருகின்றன.

பாஜகவிற்கு எதிராக வலிமையான அணி

போராட்டத்தை வலிமைப்படுத்த மாணவர் இயக்க தலைவர்கள் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தேசிய அளவில் பாஜகவிற்கு முதன்மை எதிர்க்கட்சியாக தங்களைக் கட்டியமைக்க முயலும் காங்கிரஸை ஒதுக்கிவிட்டு, வலுவான மாநிலக் கட்சிகளுடன் மட்டும் கூட்டணி அமைக்க CJP ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.

மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி?

டெல்லியில் ஆம் ஆத்மி, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், தமிழகத்தில் திமுக ஆகிய வலுவான ஆளுமை கொண்ட மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைத்து ஒரு தேசிய அளவிலான இளைஞர் - மாநிலக் கட்சிகளின் முன்னணியை உருவாக்கத் திட்டமிடப்படுகிறது.

காங்கிரஸ் மீது CJP அதிருப்தி

இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கும் நிலையில், நீட் மற்றும் மாணவர்கள் விவகாரத்தில் காங்கிரஸ் காட்டும் மெத்தனப் போக்கால் CJP தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. அடைந்துள்ளதாகப் பேச்சுக்கள் அடிபடுகின்றன. நீட்டை அறிமுகம்

ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மற்றும் திமுக தலைவர்கள் இப்போராட்டக் களத்தில் காட்டிய தீவிர ஆதரவு, இவர்களை ஒன்றிணைக்க ஒரு பாலமாக அமைந்துள்ளது.

பாஜகவை எதிர்க்க வலிமையான வியூகம்

காங்கிரஸை தவிர்த்து புதிய கூட்டணி அமைந்தால், 2029 லோக்சபா தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று இவர்கள் கருதுகின்றனர்.

அரசியல் மேடைகளில் தங்கள் குரல் எடுபடவில்லை என்பதை உணர்ந்துள்ள இளைஞர்கள், வலிமையான மாநிலக் கட்சிகளின் ஆதரவு இருந்தால், தேர்தல்களில் வெற்றிக் கனியை ஈட்ட முடியும் என்று கருதுகின்றனர்.

வலுவான 3வது அணி?

லோக்சபா தேர்தலுக்கு சுமார் 3 ஆண்டுகள் இருப்பதால், அதற்குள் வலுவான 3வது அணியை அமைக்க வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது. சமாஜ்வாதி, டிஆர்எஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் போன்ற கட்சிகளும் வெற்றியை ஈட்டும் வகையில் 3வது அணிக்கு வர வாய்ப்பும் உள்ளது.

மத்தியிலும் அதிசயம் நிகழுமா?

அப்படி நிகழ்ந்தால், காங்கிரஸ், பாஜக அல்லாத புதிய அணி ஆட்சியை கைப்பற்றவும் முடியும். மத்தியில் 15 ஆண்டுகள் தொடர்ச்சியாக பாஜக ஆட்சியை பார்த்த மக்கள், முன்பு காங்கிரஸ் ஆட்சி செய்ததையும் எதிர்கொண்டு இருப்பதால், தமிழக சட்டமன்ற தேர்தலில் நடந்தது போன்று அதிசயங்கள் நிகழும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

====================

logo
Thamizh Alai
www.thamizhalai.in