

தென்மேற்கு பருவமழை
recent study by researchers at the Indian Institute of Tropical Meteorology (IITM) in Pune found that about 25% of the monsoon rain evaporates mid-air before reaching the ground :
இந்தியாவிற்கு மழை கொடுக்கும் பருவங்கள் இரண்டு. ஒன்று தென்மேற்கு பருவமழை மற்றொன்று வடகிழக்கு பருவமழை. இவற்றின் மூலம் மட்டுமே நாட்டின் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. விவசாய பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
வெப்பநிலை அதிகரிப்பு
சூப்பர் எல் நினோ பாதிப்பால், நாடு முழுவதும் வழக்கத்திற்கு மாறாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் கடும் இன்னலை சந்தித்து வருகின்றனர்.
முன்கூட்டியே கோடைக்காலம்
2027 ஜனவரி முதலே வழக்கத்தைவிட முன்கூட்டியே கோடை வெப்பம் உணரப்படலாம் எனக் கூறப்படுகிறது. எல் நினோ வலுப்பெறுவதால் கடுமையான வெப்பம், ஒழுங்கற்ற ஆனால் தீவிரமான பருவமழை, நீண்ட வறட்சி ஏற்படும் அபாயமும் உள்ளது.
குளிர்காலத்திலும் வெப்பம் அதிகரிக்கும்
இந்த ஆண்டு அக்டோபர், நவம்பரில் வெப்பநிலை இயல்பைவிட 1.5°C-2°C வரை உயர்க்கூடும்.
சென்னையில் டிசம்பர்-பிப்ரவரி குளிர் காலமும் வழக்கத்தைவிட அதிக வெப்பமாக இருக்கலாம்.
ஒரு மணி நேர மழை 20 நிமிடங்களில் பெய்து, நகர்ப்புற வெள்ளம் மற்றும் நீர்தேக்க அபாயத்தை அதிகரிக்கலாம்.
ஆவியாகும் மழைநீர்
இந்த நிலையில், தரையை அடைவதற்கு முன்பே தென்மேற்கு பருவமழை, 25 சதவீதம் வரை ஆவியாவதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
இது குறித்து புனேயில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (IITM) மேற்கொண்ட ஆய்வின்படி, ஜூன் முதல் செப்டம்பர் வரை நீடிக்கும் பருவமழைக் காலத்தில் சராசரியாக 25% மழைத்துளிகள் தரையை அடைவதற்கு முன்பே ஆவியாகி விடுகின்றன.
முதல்முறையாக கணக்கீடு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழைத்துளி ஆவியாகும் அளவை நேரடி கண்காணிப்பின் மூலம் கணக்கிட்டது இதுவே முதல் முறை என்றும், இந்த முறையை இந்தியா முழுவதும் பயன்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
வரைபடமாக உருவாக்க விஞ்ஞானிகள் திட்டம்
ராஜஸ்தானின் வறண்ட பகுதி முதல் அதிக மழை பெய்யும் கடலோரப் பகுதிகள் வரை, வெப்ப நிலை மற்றும் ஈரப்பதத்தைப் பொறுத்து இந்த ஆவியாகும் அளவு எப்படி மாறுபடுகிறது என்பதை இந்தியா முழுவதும் வரைபடமாக உருவாக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
மழை கணிப்பில் தவறுகள்
இதுவரை இந்திய வானிலை ஆய்வு மையங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் மாடல்களில், மேகத்திலிருந்து விழும் மழைத்துளி காற்றில் எவ்வளவு தூரம் ஆவியாகிறது என்ற துல்லியமான கணக்கு இல்லை.
இதனால் பல நேரங்களில் 'இவ்வளவு மழை பெய்யும்' என்று கணிப்பது தவறாகப் போய்விடுகிறது.
துல்லிய தரவு - சரியாக கணிக்கலாம்
இப்போது 25% ஆவியாகிறது என்ற துல்லியமான தரவு கிடைத்துள்ளதால், நாளை எங்கே, எவ்வளவு சென்டிமீட்டர் மழை பெய்யும் என்பதை இன்னும் கச்சிதமாகக் கணிக்க முடியும்.
சொந்த தரவுகள் - இனி போதும்
உலகளாவிய காலநிலை மாற்றத்தால்இந்தியாவின் பருவமழைப் பொழிவு மாறிக்கொண்டே இருக்கிறது.
இந்த ஆய்வறிக்கை மூலம் அடுத்த 10 அல்லது 20 ஆண்டுகளில் இந்தியாவின் பருவமழை எப்படி மாறும் என்பதை உலக நாடுகளின் தரவை நம்பியிருக்காமல், நமது சொந்தத் தரவைக் கொண்டே கணிக்க முடியும்.
===============