Heat Stroke : நெருங்கும் கோடை : உடலை பாதிக்கும் ”ஹீட் ஸ்ட்ரோக்” : அறிகுறிகள் என்னென்ன?

வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் ஹீட் ஸ்ட்ரோக்கின் முக்கிய அறிகுறிகள் மற்றும் மற்றும் தற்காத்துக்கொள்ளும் வழிமுரைகளை குறித்து காண்போம்
Summer start: Heatstroke affects the body, what are the symptoms?
Summer start: Heatstroke affects the body, what are the symptoms? google
1 min read

நெருங்கும் கோடை காலம்

இன்னும் சில தினங்களில் கோடை காலம் நெருங்கும் நிலையில் உடலை எவ்வாறு தற்காத்து கொள்ள வேண்டும் , என்னென்ன வகையான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பன போன்ற வழிகாட்டு முறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

ஹீட் ஸ்ட்ரோக் அறிகுறி

வெப்பநிலையின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது ஹீட் ஸ்ட்ரோக் ஏற்ப்பட்டு உடலை கடுமையாக பாதிக்கின்றது . அதனை முக்கியாய் அறிகுறிகள்

* நீர்ச்சத்து இல்லாதபோது அதிக தாகம்,தலைவலி, தலைசுற்றல், தசைப்பிடிப்பு,

* குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம்

* தலைவலி,

* உடல் சோர்வு,

* அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறுதல்,

* மயக்கம்,

* வலிப்பு

* இதயத்துடிப்பு அதிகரிப்பது,

* தோல் வறண்டு சூடாக சிவந்து காணப்படுதல்,

* குமட்டல் மற்றும் வாந்தி

போன்றவை ஹீட் ஸ்ட்ரோக் அறிகுறிகள்

ஹீட் ஸ்ட்ரோக் : தற்காத்து கொள்ள வேண்டிய என்ன செய்ய வேண்டும்

வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் , உடலை தற்காத்துக்கொள்ள நாம் எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் .

* வெப்ப இழப்பைத் தவிர்க்க தினமும் 4 லிட்டர் வரை தண்ணீர் பருகியே கட்டாயம் அருந்த வேண்டும்

* தண்ணீருடன் சேர்த்து இளநீர், மோர், பழச்சாறு போன்ற தண்ணீர் சத்து அதிகம் நிறைந்த பழம் ஆகிவற்றை எடுத்துக்கொள்ளுதல்

* நீர்ச்சத்து இழப்புக்கான அறிகுறிகள் இருக்கும்போது ஓஆர்எஸ் உப்புச் சர்க்கரை கரைசல் பருக வேண்டும்.

செயற்கை பானங்களை தவிர்த்தல்

* காபி, டீ மற்றும் செயற்கை குளிர்பானங்கள், மதுபானங்களை தவிர்த்து கொள்ளுதல்

* பகல் 11-4 மணி வரை வெளியில் தேவையற்ற செயலுகாக வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

அவ்வாறு வெளியில் செல்ல நேர்ந்தால் தண்ணீர், குடை, ஓஆர்எஸ் கரைசல் ஆகியவற்றை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

* கருப்பு உள்ளிட்ட அடர் நிறங்களில் ஆடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

* பருத்தி மற்றும் மிருதுவான ஆடைகளை அணிய வேண்டும்

* முடிந்த அளவு காற்றோட்டமான பகுதிகளில் இருக்க வேண்டும்

சுகாதார துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு வழிமுறைகளை பின்பற்றுதல்.

logo
Thamizh Alai
www.thamizhalai.in