எத்தனை மனுக்கள் தாக்கல் செய்வீர்கள்? காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த இரண்டு மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
Supreme Court dismisses interim petitions filed by the Tamil Nadu government in the Cauvery water dispute.
Supreme Court, Tamil Nadu governmentsource: google
1 min read

Supreme Court dismisses interim petitions filed by the Tamil Nadu government in the Cauvery water dispute.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தீர்ப்பு

காவிரிநீர் மேலாண்மை வாரியம் கடந்த அக்டோபர் 23 - ஆம் தேதி, காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 12,000 கன அடி நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆணையத்தின் தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசு

எனினும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின் படி தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய நீரை கர்நாடகா திறந்துவிடவில்லை , தொடர்ந்து மேலாண்மை ஆணையத்தின் தீர்ப்பை மறுத்து வருவதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

தமிழக விவசாயிகளை இப்படியா வஞ்சிப்பது?

கர்நாடக அரசு இப்படி தமிழக விவசாயிகளை தொடர்ந்து வஞ்சித்தால் எப்படி விவசாயம் செய்ய முடியும்? ஏற்கெனவே தமிழகத்திற்கு இந்தாண்டு காவிரி நீர் வழங்கப்படாததால், 4 லட்சம் ஹெக்டேர் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பற்றாக்குறை நீரைத் திறந்துவிட வேண்டும்

மேலும் தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய பற்றாக்குறை நீரான 11 டிஎம்சியைத் திறந்து விட வேண்டும் என்றும், கர்நாடக அரசு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கடைபிடிக்க உத்தரவிடக் கோரியும் தமிழக அரசு மனுக்களை தாக்கல் செய்தது.

தமிழக அரசின் மூன்றாவது மனு

இதனைத் தொடர்ந்து, தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிடவில்லை என்று கர்நாடக அரசுக்கு எதிரான மூன்றாவது மனுவையும் தமிழக அரசு தாக்கல் செய்தது.

எத்தனை மனுக்களைத் தாக்கல் செய்வீர்கள்?

இன்று (20-11-2026) தமிழக அரசு தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள், அபரேஷ்குமார் சிங் மற்றும் விக்ரம்குமார் அடங்கிய அமர்வு விசாரித்தனர்.

அப்போது நீதிபதிகள் இந்த விவகாரத்தில் இன்னும் எத்தனை மனுக்களைத் தாக்கல் செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பினர். மேலும் இன்னும் எத்தனை மனுக்கள் வந்தாலும் தற்போது தள்ளுபடி செய்யப்போகிறோம் என்றனர்.

இதற்கு தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், புதிய மனுவின் விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என்றும், பின்பு அதிலுள்ள கோரிக்கைகளைப் பார்த்து அதன் பின்னர் முடிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இரண்டு மனுக்கள் தள்ளுபடி

இதையடுத்து , தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய பற்றாக்குறை நீரான 11 டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிடக் கோரிய மனுவையும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு கடைபிடிக்க உத்தரவிடக் கோரிய மனுவையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள புதிய இடைக்கால மனு மீதான விசாரணை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

=============