பெல்லட் குண்டுகள் பயன்பாட்டிற்கு நிபந்தனை ; அசாதாரண சூழலில் மட்டும் கையாள வேண்டும் ; உச்சநீதிமன்றம் உத்தரவு..!

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு முறைக்கேடுவிற்கு எதிரான சிஜேபி கட்சியின் போராட்டத்தில் பெல்லட் குண்டு பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிரடியான தீர்ப்பினை வெளியிட்டுள்ளது
upreme Court orders conditions on the use of pellet guns; they must be used only in exceptional circumstances.
upreme Court orders conditions on the use of pellet guns; they must be used only in exceptional circumstances.google
2 min read

டெல்லி போராட்டத்தில் பெல்லட் குண்டு பயன்படுத்தப்பட்ட விவகாரம்

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு முறைக்கேடுவிற்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் 35 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்களை நடத்தினர்,

போராட்டத்தின் முக்கிய கோரிக்கையான மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருகும் இழப்பிடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்றம் நோக்கி பேரணியில் ஈடுப்பட்டனர் ,

அப்போது போராட்டகாரர்களுக்கும் டெல்லி காவல் துறைக்கும் இடையே வன்முறையானது வெடித்தது , இதில் மாணவர்களை டெல்லி காவல்துறையினர் ,கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தன்ணீரை பீய்ச்சி அடித்தும் , தடியால் தாக்கியும் தாக்குதலை மேற்கொண்டனர்.

இதில் போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர் மீது டெல்லி காவல் துறை பெல்லட் குண்டுகளை வைத்து தாக்குதலி மேற்கொண்டுள்ளது , இந்த தாக்குதல் வீடியோ சமூக வளைதளங்கில் வெளியாகி அதிர்ச்சியை உண்டாக்கியது.

போராட்டக்காரர்கள் மீது பெல்லட் குண்டு தாக்குதல், ராகுல் காந்தி கண்டனம்

டெல்லி போராட்டத்தில் ஈடுப்ப்ட்ட மாணவர் மீது பெல்லட் குண்டு தாக்கப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடுமையாக எதிர்ப்பை தெரிவித்தார் , குறிப்பாக செய்தியாளர் சந்திப்பில் பெல்லட் குண்டு தாக்கிய மாணவரின் தாக்குதலை காண்பித்து மத்திய ஆளும் அரசுக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தார்

பெல்லட் குண்டு பயன்பாட்டிற்கு உச்ச்நீதிமன்றம் சில கட்டுப்பாடுகள்

டெல்லி போராட்டகாரர்கள் மீது பெல்லட குண்டு தாக்கப்பட்ட விவகாரத்தில் ,அது குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் பொதுமனு தாக்கல் செய்யப்பட்டது , இந்த மனுவானது விசாரணைக்கு வந்த நிலையில் ,

பெல்லட் குண்டுகளை முக்கியமான அசாதாரண சூழல்களை தவிர மற்ற நேரங்களில் கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. குறிப்பாக டெல்லி போராட்டத்தின் போது மாணவர்கள் மீது எந்தவிதமான ஆயுதம் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து காவல்துறை விளக்கமளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது

பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தை உச்ச நீதிமன்றம் விரிவாக விசாரணை நடத்த தயாராக இருக்கிறது என்று திட்டவட்டமாக தெரிவித்து வழக்கை ஒத்திவைத்துள்ளனர்

பொதுவாக பெல்லட் குண்டுகள் எங்கு பயன்படுத்தப்படுகிறது

பெல்லட் குண்டு துப்பாக்கிகள் அதிகமாக கூட்டத்தை சமாளிக்க காவல் தூறையால் கையாளப்படும் ஒரு முறையாகும் , இதுவும் இந்த கண்ணீர் புகை குண்டு , தண்ணீர் பீய்ய்ச்சி அடித்தல் அகியவற்றைப்போலவே இந்த பெல்லட் துப்பாக்கி கையாளவதும்

குறிப்பாக பெல்லட் குண்டு துப்பாக்கியை வைத்து கூட்டத்தினரைப் பார்த்து 500 அடி தொலைவில் இருந்து சுடும்போது, எந்த தீவிரமான பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதுவே, மிகவும் அருகே சென்று கூட்டத்தினர் மீது துப்பாக்கியால் சுடும்போது, குறிப்பாக கண்களில் குண்டுகள் சிதறி பட்டால் பார்வை இழக்கவும் வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

பெல்லட் குண்டு விவகாரம், நீதிமன்றம் கூறிய தீர்ப்பு

டெல்லி போராட்டகாரர்கள் மீது பெல்லட் குண்டு தாக்கப்பட்ட விவகாரத்தில் உச்ச்நீதிமன்றம் , நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது பிறப்பித்த உத்தரவில்,‘‘டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும்.

குறிப்பாக பெல்லட் குண்டுகளை முக்கியமான அசாதாரண சூழல்களை தவிர மற்ற நேரங்களில் கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. குறிப்பாக டெல்லி போராட்டத்தின் போது மாணவர்கள் மீது எந்தவிதமான ஆயுதம் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து காவல்துறை விளக்கமளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்

======================

=====================

logo
Thamizh Alai
www.thamizhalai.in