நீட் குளறுபடிக்கு முற்றுப்புள்ளி வையுங்க” : மத்திய அரசு மீது உச்ச நீதின்றம் அதிருப்தி” : தாக்கல் செய்ய உத்தரவு..!

நீட் தேர்வு குளறுபடிகள் மற்றும் வினாத்தாள் கசிவு வழக்கில் தொடர்பான வழக்கில், தவறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனக் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
Supreme Court reprimanded Central Govt regarding the irregularities, question paper leak in NEET exam
Supreme Court reprimanded Central Govt regarding the irregularities, question paper leak in NEET examAI generated
1 min read

Supreme Court told the Central government to put an end to a "series of errors" in the ongoing NEET examination controversy, directing the Centre and the National Testing Agency (NTA) to implement permanent structural reforms

நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகள், வினாத்தாள் கசிவு, மாணவர்கள் தற்கொலை இந்தியாவையே உலுக்கி வருகிறது. இதை முன்வைத்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

நீட் விவகாரம் - நாடு தழுவிய போராட்டம்

மாணவர்களின் போராட்டம் பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முடக்கி வருகிறார்கள். கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது தான் இவர்களின் ஒற்றை கோரிக்கையாக இருக்கிறது.

நீட் வழக்கு - உச்ச நீதிமன்றம் விசாரணை

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில், நீதிபதிகள் நரசிம்மா, அலோக் ஆரதே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் கண்டனம்

நீட் தேர்வுகளில் தொடரும் பிழைகளையும் குளறுபடிகளையும் இனியும் அனுமதிக்க முடியாது என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

மத்திய அரசுக்கு கேள்வி

முழுமையாக கணினி வழித் தேர்வுக்கு (Online Mode) மாறுவது குறித்து மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. தரவு பாதுகாப்பு எவ்வாறு உறுதி செய்யப்படும் என்றும் கேள்வி எழுப்பினர்.

நீட் மோசடியை தடுக்க ஒன்றிய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவு

நீட் மோசடி வழக்கில் ஒன்றிய அரசு இதுவரை பதில் மனு தாக்கல் செய்யாததால் உச்ச நீதிமன்றம் தனது அதிருப்தி பதிவு செய்தது.

தேர்வு முறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் வரை நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

நீட் வழக்கில் ஒரு வாரத்தில் ஒன்றிய அரசு பதில் மனு தாக்கல் செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஆண்டுதோறும் விமானத்தில் கேள்வித்தாள் கொண்டு சென்று சேர்க்க முடியாது எனவும் நீதிமன்றம் தனது கருத்தினை பதிவு செய்தது.

இந்த வழக்கு ஜூலை 27-ம் தேதிக்கு விசாரிக்கப்பட உள்ள நிலையில், முழுமையான விளக்க அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு அரசு தரப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

====

logo
Thamizh Alai
www.thamizhalai.in