இந்துவாக இருந்து இஸ்லாமியத்துக்கு மாறினால் இட ஒதுக்கீடு கிடையாது : உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது, BC சான்றிதழ் கிடையாது அப்படின்னு ! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கு.
Supreme Court ruled that who converted to Islam are not eligible for reservation benefits, BC certificate.
Supreme Court ruled that who converted to Islam are not eligible for reservation benefits, BC certificate. source:thamizhalai,ai generated
2 min read

தமிழக அரசு அரசாணை

தமிழ்நாட்டுல இந்து மதத்தின் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா், பட்டியலின பிரிவைச் சோ்ந்தவா்கள் இஸ்லாம் மதத்துக்கு மாறும்போது, அவா்கள் தொடா்ந்து இடஒதுக்கீட்டு சலுகைகளைப் பெறும் வகையில், இஸ்லாம் மதத்தின் 7 உள்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றின் கீழ் அவங்களுக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் என சான்றிதழ் வழங்கலாம்’ அப்படின்னு 2024ம் ஆண்டில தமிழக அரசு அரசாணையை வெளியிட்டு இருந்திச்சு.

அரசாணை ரத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில, அரசாணை ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு, உயர் நீதிமன்றத்தோட தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில தமிழக அரசு மேல்முறையீடு செஞ்சு இருந்திச்சு.

நீதிபதிகள் அமர்வு விசாரணை, தீர்ப்பு

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் ஸ்ரீ சந்திரசேகர் அமர்வு மனுவை விசாரிச்சு இன்னிக்கு தீர்ப்பு கொடுத்தாங்க.

முஸ்லிமாக மதம் மாறினால் இட ஒதுக்கீடு கிடையாது

அதன்படி, முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீட்டு சலுகைகளைப் பெற முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அதன்படி,

”இந்து சமூக அமைப்பிலிருந்து இந்து அல்லாத வேறொரு சமூக அமைப்பிற்கு மதம் மாறிய ஒருவர், தான் மதம் மாறுவதற்கு முன்பு கொண்டிருந்த சமூகப் பின்தங்கிய நிலையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, இட ஒதுக்கீடு அல்லது சிறப்புச் சலுகைகளை கேட்க முடியாது.

வேறு மதத்தில் அந்தஸ்தை பெற முடியாது

முந்தைய சமூக அமைப்பில் அவர் அனுபவித்த பின்தங்கிய நிலையானது, அவர் மாறிய புதிய மதத்திலும் அவருக்கு 'பின்தங்கிய வகுப்பு' என்ற அந்தஸ்தைப் பெற்றுத் தருவதற்கு அடிப்படையாக இருக்க முடியாது.

அரசியலமைப்பு ஆணை 3வது பிரிவின்படி, இந்து,சீக்கியம், பௌத்த மதம் தவிர வேறொரு மதத்தைப் பின்பற்றும் நபர், 'பட்டியல் சாதி' உறுப்பினராக கருதப்பட மாட்டார்.

சிறப்பு சலுகைகளை கோர முடியாது

எனவே, வேறொரு மதத்திற்கு மாறிய ஒரு நபர், தனது முந்தைய சாதியுடன் தொடர்புடைய 'பட்டியல் சாதி' அந்தஸ்தை இழக்கிறார். அத்தகைய சூழலில், இட ஒதுக்கீடு அல்லது சிறப்புச் சலுகைகளை அவர் கோர முடியாது.

ஒரு நபர் மதம் மாறும் முன்பாக கொண்டிருந்த சமூகப் பின்தங்கிய நிலை, அவர் மதம் மாறிய பிறகு, வேறொரு குறிப்பிட்ட பின்தங்கிய சமூகப் பிரிவில் உறுப்பினராக சேருவதற்காக சட்டப்பூர்வ அடிப்படையாக இருக்க முடியாது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவிச்சு இருக்காங்க.

இந்த வழக்கோட பின்னணி என்ன அப்படின்னு பார்த்தோம்ன்னா,

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த பரமசிவம் அப்படிங்கறவரு, 2015ம் ஆண்டு இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறி, தன் பெயரை என். சமீா் அகமது என மாற்றிக் கிட்டாரு.

சுன்னத் ஜமாத் மூலம் அவருக்கு மதமாற்றச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதையடுத்து, தனக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவின் கீழ் ‘முஸ்லிம் லெப்பை’ என ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி, சமீா் அகமது விண்ணப்பிச்சாரு.

ஆனால், இவரது மனு நிராகரிக்கப்பட்டதால, உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடுத்தாா்.இதனிடையே தான், ‘இந்து மதத்தின் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா், பட்டியலின பிரிவைச் சோ்ந்தவா்ங்க இஸ்லாம் மதத்துக்கு மாறும்போது, அவா்கள் தொடா்ந்து இடஒதுக்கீட்டு சலுகைகளைப் பெறும் வகையில், இஸ்லாம் மதத்தின் 7 உள்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றின் கீழ் அவா்களுக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் என சான்றிதழ் வழங்கலாம்’ அப்படின்னு, 2024லதமிழக அரசு அரசாணையை வெளியிட்டுச்சு.

இந்த நிலையில், என். சமீா் அகமது தொடுத்த வழக்கில், ‘ஓா் இந்து இஸ்லாம் மதத்துக்கு மாறும்போது அவா் வெறும் முஸ்லிமாக மட்டுமே மாறுகிறாா். அவரது பழைய ஜாதி அடையாளம் முற்றிலும் அழிந்துவிடுகிறது’ என 195ஆம் ஆண்டு வெளியான சென்னை உயா் நீதிமன்றத்தின் தீா்ப்பு ஒன்றில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு இருக்கு.

இந்தத் தீா்ப்பை தான் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்து இருக்கு.

=================

logo
Thamizh Alai
www.thamizhalai.in