

டெல்லியில் தொடர் போராட்டங்கள்
மத்திய பாஜக அரசுக்கு நெருக்கடி கொடுக்கவும், தேர்தல் வெற்றியை அறுவடை செய்யவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அரசு துறைகளுக்கு எதிராக போராட்டங்களை நடத்திக்கிட்டு வர்றாங்க.
நிம்மதியை குலைக்கும் இண்டியா கூட்டணி
நீட் விவகாரத்தில் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக போராட்டங்கள், எஸ்ஐஆர் விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் அப்படின்னு தலைநகர் டெல்லியில, பிரச்சினைகள் உருவாக்கி நிம்மதியை இண்டியா கூட்டணி கட்சிகள் குலைத்து வருகின்றன.
இளைஞர்களை திசை திருப்பும் சிஜேபி
இதேபோன்று, சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சியும், ஆர்ப்பாட்டங்கள் என்ற பெயரில் இளைஞர்களை திரட்டி, மக்களின் அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருது. வெளிநாட்டு நிதியுதவி மூலமா, மோடி அரசுக்கு எதிராக இவங்க செயல்படுறதும் வெளிச்சத்துக்கு வந்து இருக்கு.
உச்சநீதிமன்றம் நோக்கி ராகுல் பேரணி
போராட்டத்தின் உச்சக்கட்டமாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் புடைசூ. உச்ச நீதிமன்றம் நோக்கி பேரணி நடத்தினாங்க.
முற்றுகை, போராட்டம்
தலைமை நீதிபதி சூர்யகாந்தை சந்திக்கணும் அப்படின்னும் பிடிவாதம் பிடிச்ச அவங்க, ஒரு கட்டத்துல மனு தாக்கல் செய்யும் அறைக்குள்ளும் நுழைந்தனர். இது அப்பட்டமான அத்துமீறலா பார்க்கப்படுது.
இண்டியா கூட்டணி பேரணி காரணமா உச்ச நீதிமன்றம் அமைஞ்சி இருக்கிற பகுதியில கூச்சல், குழப்பம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. செய்தி சேகரிக்க வந்திருந்த கர்ப்பிணி பெண் பத்திரிகையாளரும் தாக்கப்பட்டதா கூறப்படுது.
இண்டியா கூட்டணி தலைவர்கள் உச்சநீதிமன்றத்தை நோக்கி பேரணி நடத்தியதை கண்டிச்சும், உச்ச நீதிமன்ற வளாகத்துக்குள் அரசியல் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்கக் கோரியும், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரியும் வழக்கறிஞர்கள் மனுதாக்கல் செஞ்சாங்க.
நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கவுரவ் பாட்டியா, “உச்ச நீதிமன்றத்தில் அரசியல் தலைவர்கள் நடத்திய பேரணி வேதனை அளிக்குது. இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் மீது அவமதிப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும்” அப்படின்னு கோரிக்கை விடுத்தாரு.
ராகுல் காந்தி விளக்கம் கொடுக்கணும்
தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பாக்சி அமர்வு இதை விசாரிச்சது. ராகுல் காந்தி சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரான நிலையில், "ராகுல் காந்தி தனது இந்தச் செயலுக்கு கண்டிப்பான விளக்கம் அளிக்க வேண்டும்" என்று தலைமை நீதிபதி கறாராக தெரிவிச்சாரு.
ராகுல், அகிலேஷ் யாதவ், மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட தலைவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கணும் அப்படின்னு வழக்கறிஞர் கௌரவ் பாட்டியா வாதிட்டார்.
200 வழக்கறிஞர்கள் கையெழுத்திட்ட மனுவைக் குறிப்பிட்டு, இது நீதிமன்றத்தின் மீது செல்வாக்குச் செலுத்தற முயற்சி அப்படின்னும் அவர் தெரிவித்தார்.
நீதித்துறையை அச்சுறுத்த முடியாது
அதற்குப் பதிலளித்த தலைமை நீதிபதி, "யாராலும் உச்ச நீதிமன்றத்தை அச்சுறுத்தவோ அல்லது மிரட்டவோ முடியாது. நீதித்துறையை மிரட்டி பணிய வைக்கவும் வைக்க முடியாது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் காட்டம்
வெளியில் நடக்கும் விவகாரங்கள் தெரியாத அளவுக்கு நாங்கள் ஒன்றும் மாட மாளிகைக்குள் வசிக்கவில்லை. அரசியல் தலைவர்கள் வெளியே என்ன அறிக்கைகளை வெளியிறாங்க. நீதிமன்றத்துக்கு வரும் போது என்ன சொல்றாங்க அப்படிங்கறது எல்லாம் எங்களுக்கு தெளிவாகவே தெரியும், அப்படின்னு தனது கண்டனத்தை காட்டமாக பதிவு செஞ்சாரு.
தேர்தல் ஆணையத்திற்கும் நோட்டீஸ்
எஸ்ஐஆர்-க்கு எதிராக டெல்லியில நடத்தப்பட்ட போராட்டங்களின் போது, போலீசாரின் அத்துமீறல்கள், பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள், பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பான வழக்குகளை விசாரிச்ச அமர்வு, போராட்டம் நடைபெற்ற பகுதிகளின் அனைத்து சிசிடிவி காட்சிப் பதிவுகளையும் பத்திரமாக பாதுகாக்கணும் அப்படின்னு உத்தரவிட்டது.
வாக்காளர் பட்டியல் திருத்த நடைமுறைகளில் உள்ள வெளிப்படைத்தன்மை, தலைமைத் தேர்தல் ஆணையரின் தன்னிச்சையான முடிவுகள் குறித்து இண்டியா கூட்டணி தாக்கல் செய்த மனு மீது, தேர்தல் ஆணையம், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் பதில் அளிக்கவும் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பிச்சது.
======================