”அன்று மம்தாவின் உதவியாளர், இன்று மேற்கு வங்க முதல்வர்” சுவேந்து அதிகாரி : முதன்முறை பாஜக ஆட்சி : மோடி பங்கேற்பு!

”பவானிபூரில் மம்தாவை வீழ்த்திய சுவேந்து அதிகாரி” மேற்கு வங்க முதல்வராக பதவியேற்றார்.
"Suvendu Adhikari, who defeated Mamata in Bhavanipur," sworn as Chief Minister of West Bengal
"Suvendu Adhikari, who defeated Mamata in Bhavanipur," sworn as Chief Minister of West Bengalgoogle
2 min read

திரிணாமூல் - மம்தா பானர்ஜி

பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத மேற்கு வங்கத்தில், 15 ஆண்டுகளாக கோலோச்சியவர் மம்தா பானர்ஜி, கம்யூனிஸ்ட் கோட்டையான மேற்கு வங்கத்தை 2011ம் ஆண்டு திரிணாமூல் கைப்பற்ற காரணமாக இருந்தவர் மம்தா பானர்ஜி.

மேற்கு வங்கத்தில் பாஜக

மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக நின்ற பாஜக அதற்கான முனைப்புகளில் தீவிரம் காட்டியது. ஒரு காலத்​தில் மேற்​கு​வங்க சட்​டப்​பேர​வை​யில் பாஜக​வுக்கு 3 எம்எல்​ஏக்​கள் மட்​டுமே இருந்​தனர்.

இந்த எண்​ணிக்கை கடந்த சட்டப்​பேர​வைத் தேர்​தலில் 77 எம்​எல்​ஏக்​களாக உயர்ந்​தது. தற்போதைய சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 207 பாஜக எம்​எல்​ஏக்​கள் தேர்ந்​தெடுக்​கப்​பட்டு உள்​ளனர். 9 மாவட்​டங்​களில் திரிண​மூல் காங்​கிரஸ் துடைத்து எறியப்பட்டு உள்ளது.

அசுர பலத்துடன் இருக்கும் பாஜக சுதந்திர இந்திய வரலாற்றில், மேற்கு வங்கத்தில் முதன்முறையாக ஆட்சி அமைத்தது பாஜக.

மேற்கு வங்க தேர்தல் முடிவுகள்

மேற்​கு​வங்​கத்​தில் ஏப்​ரல் 23, 29 ஆகிய தேதி​களில் இரு கட்​டங்​களாக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற்​றது. இதில் பதி​வான வாக்​கு​கள் கடந்த 4-ம் தேதி எண்​ணப்​பட்டன. முடிவு​கள் அறிவிக்​கப்​பட்ட 293 தொகு​தி​களில் பாஜக 207 இடங்​களில் வெற்றி பெற்று ஆட்​சி​யைக் கைப்​பற்றி உள்​ளது. திரிண​மூல் காங்​கிரஸுக்கு 80 தொகு​தி​கள் மட்​டுமே கிடைத்​தன.

பதவி விலக மறுத்த மம்தா

பதவி விலக மறுத்த மம்தா, தேர்தல் முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டினார். ஆனால், ஆளுநர் ரவி சட்டப்பேரவையின் பதவிக் காலத்தை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

சட்டசபை தலைவராக சுவேந்து அதிகாரி

இதைத் தொடர்ந்து பாஜக எம்​எல்​ஏக்​களின் கூட்​டம் கொல்​கத்​தா​வில் நடை​பெற்​றது. இதில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா மேலிட பார்​வை​யாள​ராக பங்​கேற்​றார். இந்த கூட்​டத்​தில் கட்​சி​யின் சட்​டப்​பேர​வைத் தலை​வ​ராக சுவேந்து அதி​காரி ஒரு​மன​தாக தேர்வு செய்​யப்​பட்​டார்.

யார் இந்த சுவேந்து அதிகாரி?

ஒரு காலத்தில் மம்தா பானர்ஜியின் உதவியாளராக இருந்தவர் சுவேந்து அதிகாரி. இடதுசாரிகள் ஆட்சியில் நந்திகிராம் போராட்டங்களை தலைமையேற்று வழிநடத்தியவர்.

மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக இருந்த இவர், 2009ல் திரிணாமுல் சார்பாக மக்களவை எம்பியானார். 2020ல் கருத்து வேறுபாடு காரணமாக திரிணாமூல் காங்கிரசில் இருந்து விலகிய சுவேந்து அதிகாரி, பாஜகவில் இணைந்தார்.

மம்தாவை தோற்கடித்த சுவேந்து

2021 சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் மம்தா தோற்கடித்து, இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தார் சுவேந்து அதிகாரி. 2026 சட்டமன்ற தேர்தலிலும் பவானிபூர் தொகுதியில் மம்தாவை மண்ணை கவ்வச் செய்தார் இவர்.

முதல்வரானார் சுவேந்து அதிகாரி

இந்தநிலையில், கொல்​கத்​தா​வின் பிரி​கேட் பரேடு மைதானத்​தில் நடைபெற்ற விழாவில் முதல்வராக பதவியேற்றார் சுவேந்து அதிகாரி.

பிரதமர் நரேந்​திர மோடி முன்​னிலை​யில் மேற்​கு​வங்​கத்​தின் புதிய முதல்​வ​ராக சுவேந்து அதி​காரி பதவி​யேற்றார்.

முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு

விழா​வில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்​திய அமைச்​சர்​கள், பாஜக ஆளும் மாநிலங்​களின் முதல்​வர்​கள், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர் தோல்வியில் காங்கிரஸ்

மத்​தி​யில் பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​டணி 2014-ம் ஆண்​டு ஆட்சி அமைத்​தது. அதற்கு முன்​பிருந்தே பல்​வேறு மாநிலங்​களில் காங்​கிரஸ் தோல்​வியைத் தழுவி வரு​கிறது.

21 மாநிலங்களில் பாஜக ஆட்சி

அதேசமயம், 12 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக இதுவரை 20 மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது. மேற்கு வங்கத்தை சேர்த்து பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

=======

logo
Thamizh Alai
www.thamizhalai.in