"மருத்துவ பரிந்துரைச் சீட்டு இன்றி சிரப்களை வாங்க முடியாது" : மத்திய அரசு அறிவிப்பு

இனி மருத்துவர்கள் பரிந்துரை இருந்தால் மட்டுமே இருமல் மருந்து உள்பட அனைத்து சிரப்களும் வழங்கப்படும் என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
Syrups cannot be purchased without a medical prescription: Central Government announcement.
Syrups cannot be purchased without a medical prescription: Central Government announcement. google
1 min read

மருத்துவ பரிந்துரை சீட்டு கட்டாயம்

இருமல் மருந்து உட்பட அனைத்து வகையான சிரப் மருந்துகளை வாங்க மருத்துவர் பரிந்துரைச் சீட்டு அவசியம் என்று மத்திய சுகாதர துறை தெரிவித்துள்ளது , அதன்படி ரிந்துரை சீட்டு இன்றி கடைகளில் நேரடியாக மருந்துகளை வாங்க முடியாது

அனைத்து மருந்தகங்களும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும்

சமீபத்தில் கலப்படம் செய்யப்பட இருமல் மருந்தால் ,மத்தியப்பிரதேசத்தில் 20 குழந்தைகள் வரை உயிரிழந்த நிலையில், அரசு இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் அனைத்து மருந்தகங்களும் கட்டயாம் இந்த நடவடிக்கையை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டிருக்கிறது

இது குறித்து ஒன்றிய அரசு தெரிவித்துள்ளதாவது

நீக்கப்பட்ட சிரப்ஸ் வார்த்தை

மத்திய அரசின் அரசு மருந்துகள் 5-வது திருத்த விதிகளின் படி , 2026 மூலமாக இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

இதன்படி, வீட்டு உபயோக சாதாரண மருத்துவப் பொருட்களின் வரிசையில் இடம் பெற்றிருந்த 'சிரப்ஸ்' என்ற வார்த்தை தற்போது அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளது.

சட்டபிரிவு அதிகாரங்களை பயன்படுத்தி இறுதி முடிவு

இதுவரை எவ்வித கட்டுப்பாடும் இன்றி விற்கப்பட்டு வந்த திரவ மருந்துகளான சிரப்கள் அனைத்தும், தற்போது கடுமையான மருந்து ஒழுங்குமுறைப் பட்டியலின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

அதன்படி டிரக்ஸ் டெக்னிக்கல் அட்வைசரி போர்டு (DTAB) உடன் கலந்தாலோசித்து, மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம், 1940-இன் பிரிவுகள் 12 மற்றும் 33-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த இறுதி அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

=

logo
Thamizh Alai
www.thamizhalai.in