தமிழக தேர்தல் 2026 : வெற்றி பெற்ற விஜய்க்கு. காந்தியின் பேரன் வாழ்த்து!

தமிழக தேர்தலில் வெற்றிபெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு மகாத்மா காந்தியின் பேரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Elections 2026: Gandhi's grandson congratulates Vijay on his victory
Tamil Nadu Elections 2026: Gandhi's grandson congratulates Vijay on his victory google
1 min read

முதல் போட்டியிலேயே அதிக இடங்களை கைப்பற்றிய விஜய்

போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே அதிக வாக்குலை பெற்று விஜய் அபார வெற்றி பெற்றார் .தேர்தல் வரலாறு காணாத ஒரு மும்முனை போட்டியை கண்டுள்ளது.

முதல் தேர்தலிலேயே 34.92% வாக்குகளை பதிவுசெய்த விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் வெற்றிபெற்றதோடு, 1967-க்கு பிறகு திமுக, அதிமுக இரண்டில் ஒன்றில்லாமல் தனிபெருங்கட்சியாக உருவெடுத்துள்ளது. மேலும் முதல் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்ற எம்ஜிஆரின் (33.52%) சாதனையை முறியடித்து விஜய் வரலாறு படைத்துள்ளார்.

விஜய்யின் வெற்றி : காந்தியின் பேரன் வாழ்த்து

வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுத்தியிருக்கும் , காந்தியின் பேரன் ,அன்புள்ள முதலமைச்சர், தேர்ந்தெடுக்கப்பட்ட) சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு, உங்களின் மகத்தான வெற்றிக்கு வாழ்த்துகளும் மனமார்ந்த பாராட்டுகளும்.

தமிழக முதலமைச்சராக உங்கள் பதவிக்காலம் மகத்தான வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன். நான் உங்கள் மற்றும் எனது மாநிலத்தின் வாக்காளர். ஆனால், ஏப்ரல் 23ஆம் தேதி அன்று உங்களுக்கு வாக்களித்த சுமார் 35% பேரில் நான் இல்லை. உங்களுக்கு வாக்களிக்காத 65% பேரில் நானும் ஒருவன்.

புத்துணர்ச்சி கொண்டவனாக உள்ளேன்

விஜய்க்கு இளைஞர்களிடையே கவர்ச்சி இருக்கிறது, அது ஓட்டாக மாறாது என்ற பரவலான கருத்தை நானும் ஏற்றுக்கொண்டிருந்தேன். ஆனால், மே 4 அன்று புள்ளி விவரங்கள் வெளிவரத் தொடங்கியபோது, ​​நான் மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.

அந்த அதிர்ச்சியோடு ஒருசேர இந்த எண்ணமும் தோன்றியது “அவன் புதியவன், அதாவது அவனுக்கு அனுபவம் இல்லை. ஆனால் அதே சமயம், ஊழல்வாதியான, தந்திரமான மோசக்காரர்களின் பிடியில் சிக்காத, புத்துணர்ச்சியான ஒருவனாகவும் இருக்கிறான்” என்று தோன்றியது.

என்று விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார்

விஜயாகவே சட்டசபைக்குள் நுழையுங்கள்

தொடர்ந்து இது குறித்து பேசிய அவர் ,மதிப்பிற்குரிய முதலமைச்சர் அவர்களே, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முக ஸ்டாலினிடம் சில கருத்துக்களைத் தெரிவிக்க நான் துணிந்ததைப் போலவே, உங்களிடமும் அவ்வாறே செய்யத் துணிகிறேன்.

கூட்டாட்சியை பாதுகாக்க முனையுங்கள்

நீங்கள் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுவிட்டீர்கள், அவையில் நடைபெறும் மிக முக்கியமான நம்பிக்கை வாக்கெடுப்பில் நீங்கள் இன்னும் வெற்றி பெறவில்லை. இந்தியாவின் கூட்டாட்சி மற்றும் மதச்சார்பற்ற கட்டமைப்பைப் பாதுகாப்பதை உங்கள் முதன்மை முன்னுரிமையாகக் கொள்வது அவசியம்.

மூத்த தலைவர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள்

உங்கள் தலைமையிலான அரசு, அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் தூணாக நிற்கட்டும். உங்கள் பதவியைக் காப்பாற்றுவது குறித்த எந்தப் பதற்றமும், அதில் சமரசம் செய்துகொள்ள உங்களை எதுவும் தூண்ட வேண்டாம் என்று நீங்கள் சட்டபேரவைக்குள் விஜய்யாகவே நுழையுங்கள் என்று தெரிவிதார்

உங்கள் கட்சியில் இருக்கும் மூத்த தலைவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள் என்றும் தெரிவித்தார்.

===================

logo
Thamizh Alai
www.thamizhalai.in