டாடா நிறுவனங்களின் நஷ்டம் முக்கிய காரணமா?
சந்திரசேகரனுக்கும் நோயல் டாடாவுக்கும் இடையிலான கருத்து வேறுபாட்டுக்கு, டாடா குழுமத்தின் சில பட்டியலிடப்படாத நிறுவனங்களின் நஷ்டமும் முக்கிய காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது.
டாடா குழுமம் கையகப்படுத்திய ஏர் இந்தியாவின் நஷ்டம் 2025-26 நிதியாண்டில் ரூ.22,238 கோடியாக அதிகரித்துள்ளது. 2024-25 நிதியாண்டில் இது ரூ.10,859 கோடியாக இருந்தது. அதாவது, ஒரே ஆண்டில் நஷ்டம் இரு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில், ஏர் இந்தியாவின் வருவாய் ரூ.78,636 கோடியிலிருந்து ரூ.71,870 கோடியாகக் குறைந்துள்ளது.
டாடா டிஜிட்டல் நிறுவனமும் 2025-26 நிதியாண்டில் ரூ.4,974 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது.
ஏர் இந்தியாவை உலகத் தரம் வாய்ந்த விமான நிறுவனமாக மாற்ற டாடா குழுமம் தொடர்ந்து முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது. புதிய விமானங்கள், தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு மற்றும் பயணிகளுக்கான சேவைகளை மேம்படுத்துவதற்கான செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், நிறுவனத்தின் நிதிச் செயல்பாடு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.AIR திடீர் விலகல் பங்குகள் சரிவு :
டாடா குழும தலைவரும் மற்றும் அதில் முக்கிய நபராக விளங்கும் சந்திரசேகர் திடீரென அவரது பதவியை ராஜினாமா செய்துள்ளார் இன்று மதியம் தனது பதவியில் இருந்து அவர் விலகுவதாக நிர்வாகத்திடம் தெரிவித்து இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன அவரின் விலகலை அடுத்து டாடா குழும பங்குகள் தொடர்ந்து சரிந்து வருகிறது குறிப்பாக சுமார் 4 % பங்குகள் வீழ்ச்சி அடைந்திருப்பதாக தகவல் வெளியாகிருக்கின்றன குறிப்பாக இவர் TCS, TATA MOTORS ,AIR INDIA, TATA STEEL போன்ற முக்கிய நிறுவனத்தை அவர் மேற்பார்வையிட்டார் என்பது குறிப்பிடதக்கது.
விலகுவதற்கான காரணம் :
அவர் தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்து இருப்பதற்கான காரணம் ,அவருக்கும் டாடா டிரஸ்ட் நிர்வாக தலைமை நபரான நோயால் டாடாவிற்கும் நிர்வாக ரீதியான கருத்து வேறுபாடு என கூறப்படுகிறது இதில் மிக முக்கியமாக அவரது பதவிக்காலம் என்பது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை உள்ளது குறிப்பிடதக்கது .
புதிய தலைவரை தேர்ந்தெடுக்க தலைமையிடம் அவர் வேண்டுகோள் :
அவர் பதவியில் இருந்து விலகிய சூழலில் நிர்வாக மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகாக விரைந்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என சந்திரசேகர் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது
டாடா நிறுவனங்களின் நஷ்டம் முக்கிய காரணமா ?
சந்திரசேகரனுக்கும் நோயல் டாடாவுக்கும் இடையிலான கருத்து வேறுபாட்டுக்கு, டாடா குழுமத்தின் சில பட்டியலிடப்படாத நிறுவனங்களின் நஷ்டமும் முக்கிய காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது.
டாடா குழுமம் கையகப்படுத்திய ஏர் இந்தியாவின் நஷ்டம் 2025-26 நிதியாண்டில் ரூ.22,238 கோடியாக அதிகரித்துள்ளது. 2024-25 நிதியாண்டில் இது ரூ.10,859 கோடியாக இருந்தது. அதாவது, ஒரே ஆண்டில் நஷ்டம் இரு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில், ஏர் இந்தியாவின் வருவாய் ரூ.78,636 கோடியிலிருந்து ரூ.71,870 கோடியாகக் குறைந்துள்ளது.
டாடா டிஜிட்டல் நிறுவனமும் 2025-26 நிதியாண்டில் ரூ.4,974 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது.
ஏர் இந்தியாவை உலகத் தரம் வாய்ந்த விமான நிறுவனமாக மாற்ற டாடா குழுமம் தொடர்ந்து முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது. புதிய விமானங்கள், தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு மற்றும் பயணிகளுக்கான சேவைகளை மேம்படுத்துவதற்கான செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், நிறுவனத்தின் நிதிச் செயல்பாடு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.