தெலங்கானா 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து ; முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவிப்பு

Telangana Government Announcement on 10th Board Exam Cancellation : தெலங்கானாவில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்ய மாநில அரசு முடிவு எடுத்துள்ளது.
Telangana Chief Minister Revanth Reddy announces cancellation of Class 10 board exams latest news in Tamil
Telangana Chief Minister Revanth Reddy announces cancellation of Class 10 board exams latest news in Tamilgoogle
1 min read

இடைநிற்றலை தடுப்பதற்கு இந்த முடிவு ;முதல்வர் தெரிவிப்பு

Telangana Government Announcement on 10th Board Exam Cancellation : இந்த முடிவு குறித்து கூறிய முதல்வர் மாணவர்களின் கல்வி சுமையை குறைத்து, இடைநிற்றலை தடுப்பதை நோக்கமாக கொண்டு, பொது தேர்வை ரத்து செய்யும் முறையை எடுத்திருப்பதாக ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தெலங்கானாவில் 10ஆம் வகுப்புக்கு பிறகு இடைநிற்றல் அதிகரித்ததை தொடர்ந்து, இந்த நடவடிக்கையை மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்த கல்வி மேம்படும் -முதல்வர்

தெலங்கானா புதிய கொள்கையின் கீழ் மாணவர்களுக்கு 10ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு என்ற அழுத்தம் இருக்காது என்றும் மாறாக தொடர்ச்சியாக மதிப்பீடு மற்றும் ஒட்டுமொத்த கல்வி மேம்பாட்டிற்கு இது வழிவகுக்கும் என்றும் தெலங்கானா அரசு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் மாணவர்களின் சுமையும் பெருமளவில் குறையக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற மாநிலங்களில் முக்கியமாக பார்கப்படும் இந்த தேர்வு

பெரும்பாலன மாநிலங்களில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு கட்டாய நடைமுறையில் இருக்கும் நிலையிலும் ,பத்தாம் வகுப்பு பொது தேர்வு மதிப்பெண் அடிப்படையில் வேலைவாய்ப்பை பெரும் சூழல் இருக்கும் நிலையில் ,தெலங்கானா அரசு பொது தேர்வை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in