

தேசிய சமூக உதவித் திட்டம்
வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள ஏழை எளிய மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்குற நோக்கத்தோட, 1995ம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது தான் NSAP அப்படின்னு அழைக்கப்படுற தேசிய சமூக உதவித் திட்டம்,
மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகத்தோட மேற்பார்வையில, • இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியத் திட்டம், இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம், தேசிய குடும்ப நலத் திட்டம், அன்னபூர்ணா திட்டம்: ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
5 ஆண்டுகள் நீட்டிப்பு
இந்தநிலையில பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, இத்திட்டத்தை 2026-27 முதல் 2030-31 வரை 5 வருஷத்துக்கு தொடர்ந்து நடத்த ஒப்புதல் கொடுத்து இருக்கு. இதற்காக 53 ஆயிரத்து 428 கோடி ரூபாய் நிதியையும் அரசு ஒதுக்கி இருக்கு.
திட்டங்களுக்கு மறுபெயர் சூட்டல்
தேசிய சமூக உதவித் திட்டம் மற்றும் அதன் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் துணைத் திட்டங்களின் பெயர்களை மத்திய அரசு மாற்றியமைச்சு இருக்கு.
தேசிய சமூக உதவித் திட்டத்துக்கு 'பிரதான் மந்திரி சாமாஜிக் சகாயதா யோஜனா' என்றும், முதியோர் ஓய்வூதியத் திட்டம் 'பிரதான் மந்திரி விருத்தாவஸ்தா பென்ஷன் யோஜனா' எனவும் பெயர் மாற்றம் பெற்று இருக்கு. விதவை ஓய்வூதியத் திட்டம் 'பிரதான் மந்திரி விதவா பென்ஷன் யோஜனா', மாற்றுத்திறனாளி ஓய்வூதியத் திட்டம் 'பிரதான் மந்திரி திவ்யாங்ஜன் பென்ஷன் யோஜனா', தேசிய குடும்ப நலத் திட்டம் 'பிரதான் மந்திரி பரிவார் லாப் யோஜனா' என மறுபெயரிடப்பட்டுள்ளது.
விதிகளி்ல் பெரும் தளர்வு
மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத்துல சில முக்கிய தளர்வுகள், நிதியுதவி அதிகரிப்பு முக்கிய மாற்றமா பார்க்கப்படுது. அதாவது உதவித்தொகை பெற 80% இயலாமை இருக்கணும்னு அவசியம் இல்லை, 40% இருந்தாலே போதும், பென்ஷன் கிடைக்கும்.
பிறந்த குழந்தைக்கும் ஓய்வூதியம்
அதுமட்டுமல்லாம இதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு ரத்து செய்யப்பட்டு இருக்கு. எனவே, பிறந்த குழந்தை முதல், அதாவது பூஜ்யம் வயது தொடங்கி, மாற்றுத்திறனாளியா இருக்கிற அனைவருக்கும் மத்திய அரசின் உதவித்தொகை கிடைக்கும்.
0 முதல் 79 வயது வரை மாதம் 375 ரூபாய் உதவித்தொகையாகவும், 80 வயசுக்கு மேற்பட்டவரா இருந்தா, மாதம் 625 ரூபாயும் பென்சனாக தங்கஃ தடையின்றி வழங்கப்படும்.
ஏற்கனவே செயல்முறையில் இருக்கும் முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம் மற்றும் குடும்ப நலத் திட்டங்கள் எநத மாற்றமும் இன்றி பழைய நடைமுறையிலேயே தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
3.20 கோடி மக்கள் பயன் பெறுவர்
நலத் திட்டங்களை மத்திய அரசு விரிவாக்கம் செஞ்சு இருக்கிறதால, நாடு முழுவதும் உள்ள 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 3.20 கோடி ஏழை மக்கள் பயனடைவாங்க.
வங்கிக் கணக்கில் வரவு
மேலும், இத்திட்டங்களுக்கான நிதியுதவி முழுவதும் இடைத்தரகர்கள் இல்லாமல், பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கே நேரடியாக, அதாவது Direct Benefit Transfer மூலமா செலுத்தப்படும் என்பதால், பயனாளிகளுக்கு முழு பயனும் சென்று சேரும்.
==================