

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு
1950ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 14-ல் 2021-ம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தம் மற்றும் பிரிவு 19-ன் படி, ஜனவரி1, ஏப்ரல் 1, ஜூலை 1 அல்லது அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 18 வயதை பூர்த்தி செய்யும்,,,
அல்லது ஏற்கெனவே 18 வயதை அடைந்த எந்த நபரும், எந்தவொரு திருத்தப் பணிக்காகவும் காத்திருக்காமல், வழக்கமான வாக்காளர் பட்டியல் புதுப்பிப்பு நடைமுறையின் கீழ் வாக்காளராகப் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம்.
எஸ்ஐஆர் பணிகள் - பெயர்கள் சேர்ப்பு
எஸ்ஐஆர் காலகட்டத்திலும் 18-28 வயதுடையவர்களில் 2.73 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது, இளம் வாக்காளர்களின் பதிவு தொடர்ந்து நடைபெற்றதற்கான சான்றாக உள்ளது.
இதன்மூலம் வருங்காலங்களில் இந்தியாவின் அரசியலை நிர்ணயிக்கும் மிகப்பெரிய சக்தியாக இளைஞர் சமுதாயம் இருக்க போவது உறுதியாகி இருக்கிறது.
பெயர் சேர்க்க படிவம் 6
புதிய வாக்காளர்கள் பெயர்களைச் சேர்க்க படிவம் 6 பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் தகுதியான இளைஞர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் தொடர்ந்து இணைத்து வருகின்றனர்.
தேர்தல் ஆணையத்தின் தொடர்ச்சியான வாக்காளர் பட்டியல் புதுப்பிப்புப் பணிகள் மற்றும் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் மூலம் இந்த இளைய தலைமுறை வாக்காளர்களின் சேர்க்கை தடையின்றி நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
=============