விளையாட்டிற்கான உயரிய விருது
Indian Women Cricket Team : விளையாட்டு உலகின் மிக உயர்ந்த விருதாக லாரஸ் விருதும் கருதப்படுகிறது. அந்த வகையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பெயர் இந்த விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க முக்கியமான ஒன்றாகும்.
பெருமையை பெரும் இந்திய மகளிர் அணி
அதன்படி சிறந்த அணிக்கான தகுதியில் இந்திய மகளிர் அணி தேர்நதெடுக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.விருதுக்கான பரிந்துரைக்கு செல்லும் முதல் இந்திய மகளிர் அணி இதுவேயாகும் .
அதிகாரபூர்வ அறிவிப்பு
அதன்படி இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானாது ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நேற்று நடைபெற்றது.இது முற்றிலுமாக மகளிர் அன்னிக்கு கிடைத்த அங்கீகாரமாகவே கருதப்படுகிறது
விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்ட பிற அணிகள்
சிறந்த அணிக்கான விருதுக்கு இந்திய மகளிர் அணியுடன் சேர்த்து இங்கிலாந்து மகளிர் கால்பந்து அணி, ஐரோப்பிய ரைடர் கோப்பை அணி, பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப் கால்பந்து அணி, மெக்லாரன் பார்முலா 1 அணி ஆகிய அணிகளும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
அறிவிப்பு தேதி
இந்த விருதின் வெற்றியாளர் வரும் ஏப்ரல் 20-ம் தேதி மாட்ரிட்டில் நடைபெறும் விழாவில் அறிவிப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.விளையாட்டு உலகின் மிக உயர்ந்த விருதாக லாரஸ் விருதும் கருதப்படுகிறது.
அந்த வகையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பெயர் இந்த விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க முக்கியமான ஒன்றாகும்.
==========