

ஈரான் - இஸ்ரேல் போர்
Domestic LPG cylinder price hiked by Rs 60, commercial up by Rs 115 amid Iran war ஈரான் : இஸ்ரேல், அமெரிக்கா இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிசக்தி பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது. இதனால் விலை அதிகரிக்கும் அபாயமும் எழுந்துள்ளது.
இந்தியாவில் தட்டுப்பாடு இல்லை
இந்தியாவில் எந்த தட்டுப்பாடும் ஏற்படாது, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்து உள்ளது. இந்தநிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளன.
சிலிண்டர் விலை உயர்வு
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடையுள்ள மானியம் இல்லாத சிலிண்டரின் விலை சிலிண்டருக்கு ரூ.60 உயர்த்தப்பட்டுள்ளது.
வீட்டு உபயோக சிலிண்டர் விலை அதிகரிப்பு
இதன் மூலம் சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை 928.50 ரூபாயாகவும், டெல்லியில் 913 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. கொல்கத்தா,மும்பை போன்ற மற்ற பெருநகரங்களிலும் இதே போன்ற விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
வணிக சிலிண்டர் விலையும் உயர்வு
வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடையுள்ள சிலிண்டர்களின் விலை 115 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் வணிக சிலிண்டரின் விலை 2,043.50 ரூபாயாக உயர்ந்துள்ளது,
இது உணவகங்கள் மற்றும் சிறு தொழில்களில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்க வழிவகுக்கும் என்று அஞ்சப்படுகிறது.
சிலிண்டர் முன்பதிவு - கட்டுப்பாடு
போர் சூழலால் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில் பொதுமக்கள் அதிக அளவில் சிலிண்டர்களை முன்பதிவு செய்வதைத் தவிர்க்க, இரண்டு சிலிண்டர் முன்பதிவுகளுக்கு இடையே 21 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் அமல்படுத்தியுள்ளன.
=====