பயங்கரவாதத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு

அரசு முறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார் .
The Prime  minister modi, state visit to Israel, delivered speech in the Israeli parliament.
The Prime minister modi, state visit to Israel, delivered speech in the Israeli parliament.google
1 min read

இஸ்ரேல் நாட ளுமன்றத்தில் உரை

இஸ்​ரேல் நாடாளு​மன்​றம் ‘நெசட்​டில்’ சிறப்​புரை​யாற்​றி மோடி தீவிரவாத செயல்பாடுகள் எதையும் எந்த விதத்திலும் நியப்படுத்த முடியாது எனவும் திட்டவட்டமாக கூறினார்.

உற்சாக வரவேற்பு

அரசுமுறை பயணமாக இஸ்​ரேல் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாடாளுமன்ற வளாகத்தில் மிகுந்த உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது .அவர் நாடாளு​மன்​றத்​தில் நுழைந்த போது, மோடி.. மோடி என இஸ்​ரேல் எம்​.பி.க்​கள் உற்​சாக​மாக கோஷம் எழுப்பி வரவேற்​றனர்.

இஸ்ரேல் நாடளுமன்றத்தில் பேசும் முதல் இந்திய பிரதமர்

அந்தவகையில் இஸ்ரேல் நாடளுமன்றத்தில் உரையாற்றும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடிபெற்றுள்ளார்.

நன்றி தெரிவித்து பிரதமர் பெருமிதம்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சந்தித்த பின் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், பிரதமர் நெதன்யாகுவுடனான சந்திப்பு மகிழ்ச்சியாகவும் சிறப்பாகவும் இருந்தது என்றும் தனது நன்றியை தெரிவித்து பதிவிட்டிருந்தார் . 9 ஆண்டுகளுக்கு பின்பு இஸ்ரேல் வந்தது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் குறிப்பிட்டார்.

இஸ்​ரேல் நாடாளு​மன்​றத்​தில் பிரதமர் நெதன்​யாகு உரை

இந்தியாவும் இஸ்​ரேலும் சகோதர நாடு​கள். பிரதமர் மோடி இஸ்​ரேல் வந்​துள்​ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும், இந்​தி​யா​வும் இஸ்​ரேலும் தங்​கள் உறவை வலுப்​படுத்தி வந்து கொண்டு இருக்கின்றன என்றும் தெரிவித்தார் . மோடியைக் கட்​டிப்​பிடித்து வரவேற்​பது உண்​மை​யிலேயே மிகச் சிறப்​பான உறவை இது காட்டுகிறது என்றும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இந்தியா இஸ்ரேல் ஒப்பந்தம்

இரு நாடு​கள் இடையே​யான வர்த்​தகம் இரு மடங்கு அதி​கரித்​துள்​ளது. தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தத்தை செயல்​படுத்​து​வது குறித்து இந்​தி​யா​வும் - இஸ்​ரேலும் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​வதாகவும் தீவிர​வாத விஷ​யத்​தில் இஸ்​ரேலுக்கு ஆதர​வாக இந்​தியா இருக்கும் என்றும் இப்​பகு​தி​யில் நிலை​யான அமைதி நிலவ வேண்​டும் என இந்​தியா விரும்​பு​வதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

பிரதமரின் அரசுமுறை பயணம்

பிரதமர் மோடி இதற்கு முன்பு கடந்த 2017-ம் ஆண்டு இஸ்​ரேலுக்கு அரசு முறைப் பயணம் மேற்​கொண்​டார். அதன்​பின் 9 ஆண்​டு​கள் கழித்து தற்​போது அரசு முறைப் பயணம் சென்​றுள்​ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in