Kerala to Keralam : ’கேரளா’ இனி ‘கேரளம்’ என அழைக்கப்படும் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Union Cabinet approved changing name of State of Kerala to Keralam : கேரளா மாநிலத்தின் பெயரை “கேரளம்” (KERALAM) என மாற்றம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது.
The Union Cabinet has approved changing the name of the state of Kerala to “KERALAM”.
The Union Cabinet has approved changing the name of the state of Kerala to “KERALAM”.google
1 min read

Union Cabinet approved changing name of State of Kerala to Keralam : தமிழகத்தின் அண்டை மாநிலம் கேரளா. கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளா, இயற்கை எழில் கொஞ்சும் மாநிலமாகும்.

கேரள சட்டசபையில் தீர்மானம்

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் உள்ள அனைத்து மொழிகளிலும் கேரளாவின் பெயரை, ‘கேரளம்’ என்று மாற்றம் செய்ய வலியுறுத்தி, 2023ம் ஆண்டு, அம்மாநில சட்டசபையில் முதல்வர் பினராயி விஜயன் தீர்மானம் கொண்டு வந்தார்.

மத்திய அரசுக்கு அனுப்பிவைப்பு

இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இதை மத்திய உள்துறை அமைச்சகம் திருப்பி அனுப்பியது.

2வது முறையாக தீர்மானம்

இதனையடுத்து 2024ம் ஆண்டு உரிய திருத்தங்களுடன் அரசியல் சாசனத்தின் 3வது பிரிவின் கீழ் மற்றொரு தீர்மானம், கேரளா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மே மாதத்திற்குள் கேரளா மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் கேரளா மாநில அரசின் நீண்டகால கோரிக்கையை ஏற்று அம்மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது.

மத்திய அரசு முறைப்படி அனுமதி

டெல்லி சேவா தீர்த் வளாகத்தில் முதன்முறையாக மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கேரளாவின் பெயரை கேரளம் என மாற்றம் செய்ய முறைப்படி அனுமதி வழங்கப்பட்டது.

அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்கியிருப்பதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பிவைப்பு

கேரளா எனும் பெயரை கேரளம் என மாற்ற குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அரசியல் சாசன பிரிவின் 3வது பிரிவின் கீழ் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது.

கேரளாவில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநில பெயர் மாற்றம் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

=================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in