68% ஆதரவு : உலகின் மிகவும் பிரபலமான தலைவர்: பிரதமர் மோடி மீண்டும் சாதனை !

World's Most Popular Leader PM Narendra Modi : பிரதமர் மோடிக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ள மக்களிடமும் அங்கீகாரமும் புகழும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The World's Most Popular Leader—Prime Minister Narendra Modi Sets Another Record!
The World's Most Popular Leader—Prime Minister Narendra Modi Sets Another Record!source : google
1 min read

பிரதமர் மோடி சாதனை :

World's Most Popular Leader PM Narendra Modi : பிரதமர் மோடி உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து இரண்டாவது முறையாக சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்க தரவு பகுப்பாய்வு நிறுவனம்

அமெரிக்காவை சேர்ந்த தரவு பகுப்பாய்வு நிறுவனமான 'மார்னிங் கன்சல்ட்' என்ற நிறுவனம் உலக தலைவர்களில் பிரபலமான தலைவர் யார் என்ற ஆய்வினை மேற்கொண்டது.

பிரதமர் மோடி மீண்டும் சாதனை

தற்போது வெளியான இந்த ஆய்வு முடிவில் உலகின் பிரபலமான தலைவராக பிரதமர் மோடி மீண்டும் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

'மார்னிங் கன்சல்ட்' என்ற நிறுவனம் இந்த ஆய்வினை கடந்த இரண்டாம் தேதி முதல் எட்டாம் தேதி வரையிலான காலகட்டத்தில் நேரடியாக பொதுமக்களிடம் மேற்கொண்டுள்ளது.

பிரதமர் மோடிக்கு 68 % ஆதரவு

இத்தரவுகளின் படி 68 சதவீத ஆதரவு பிரதமர் மோடிக்கு கிடைத்துள்ளது. மேலும் பிரதமர் மோடிக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ள மக்களிடமும் அங்கீகாரமும் புகழும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலக தலைவர்கள் பட்டியலில் டிரம்ப்

இந்த பட்டியலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் 39 சதவீத ஆதரவுகளைப் பெற்று 14 ஆவது இடத்தில் உள்ளார். ஈரான் மீதான அமெரிக்க இஸ்ரேல் போர் காரணமாக அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மற்ற தலைவர்கள்

சுவிட்சர்லாந்து அதிபர் பார்மெலின் மற்றும் தென்கொரிய அதிபர் லீ ஜேம் யுங் முறையே 62 சதவீதங்களைப் பெற்று இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.

தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் 17 சதவீதம், இன்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 24 சதவீதத்துடன் பின்தங்கி உள்ளனர்.

2024 -ல் பிரதமரின் சாதனை

இதற்குமுன் 2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 69 சதவீத மக்களின் ஆதரவைப் பெற்று முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

======

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in