9,10ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற, மூன்றாம் மொழியின் உள் மதிப்பீட்டு தேர்ச்சி கட்டாயம் ; சிபிஎஸ்சி உத்தரவு..

9, 10ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற மூன்றாம் மொழியின் உள் மதிப்பீட்டுத் தேர்வில் தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது
third language is mandatory to pass Classes 9 and 10, according to a CBSE
third language is mandatory to pass Classes 9 and 10, according to a CBSEgoogle
1 min read

9, 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற , மூன்றாம் மொழி தேர்ச்சி கட்டாயம்

9, 10ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற மூன்றாம் மொழியின் உள் மதிப்பீட்டுத் தேர்வில் தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 2027-28 கல்வியாண்டு முதல் 10ஆம் வகுப்பு செல்பவர்கள் பொதுத்தேர்வில் மூன்றாம் மொழித் தேர்வு எழுத தேவையில்லை என்றும் ,ஆர்3 என்று கூறப்படும் 3வது மொழிப் பாடத்துக்கு, பள்ளிகள் நடத்தும் உள்நிலைத் தேர்வுகள் மூலமாக மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது

இந்த அறிவிப்புக்கு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

இது குறித்தான அறிவிப்பின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ,மூன்றாவது மொழிப் பாடத்திட்டத்துக்கான தேர்வுகள், பள்ளி அளவிலான உள் மதிப்பீட்டு முறையில் மட்டுமே பதிவு செய்யப்படும்.

3வது மொழிப்பாடத்தில் தேர்ச்சி பெறாத மாணவர்களும் 10ம் வகுப்புக்கு முன்னேற்றம் செய்யப்படுவார்கள். ஆனால், அதே மாணவர்கள் 10ஆம் வகுப்பு படிக்கும்போது மூன்றாவது மொழிப் பாடத்திலும் தேர்ச்சி பெற வேண்டியது அவசியமாகும் என்று குறிப்பிட்டுள்ளது

சிறப்பு குழந்தைகளுக்கு விலக்கு

இந்த புதிய செயல்முறை திட்டமானது சிறப்புக் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 3வது மொழிப் பாடத்தைக் கற்பதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் ,

வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்கள் இந்திய மொழி ஒன்றை 3வது மொழியாக எடுத்துப் படிப்பதில் விலக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது

மறுமதிப்பீட்டின் மூலம் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பு

மேலும் 10-ஆம் வகுப்பு மாணவர்களைப் பொறுத்தவரை, சிபிஎஸ்இயின் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதற்கான சான்றிதழ் பெறுவதற்கு, தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்றும்

அதேசமயம் 10-ஆம் வகுப்பில் 3வது மொழித் தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கு மறுமதிப்பிட்டின் மூலம் தேர்வு எழுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

======================

logo
Thamizh Alai
www.thamizhalai.in