”வெறும் ரூ.5 டிக்கெட்“ : 17ம் தேதி முதல் ”ஹைட்ரஜன் ரயில்” : ஐந்தாவது நாடு இந்தியா, விரைவில் 35 ரயில்கள் அறிமுகம்...!

இந்தியாவில் வரும் 17ம் தேதி முதல் பயணிக்க இருக்கும் ஹைட்ரஜன் ரயிலில் டிக்கெட் விலை 5 ரூபாயாக இருக்கும் எனத் தெரிய வந்துள்ளது.
ticket price for the hydrogen train set to operate in India starting on the 17th will be just 5 rupees
ticket price for the hydrogen train set to operate in India starting on the 17th will be just 5 rupeesAI generated
1 min read

இந்திய ரயில்வே

ரயில்வே துறையை நவீனப்படுத்துவதில் மத்திய அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வந்தே பாரத்திற்கு அடுத்தபடியாக புல்லட் ரயில்கள் வர இருக்கின்றன.

முதல் ஹைட்ரஜன் ரயில்

அதேபோன்று, வரும் 17ம் தேதி தனது முதல் ஹைட்ரஜன் ரயிலை அறிமுகப்படுத்துகிறது இந்தியா. இது ரயில்வே துறையில் மிகப்பெரிய மைல்கல்லாக இருக்கும்.

பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயிலை வருகின்ற 17ம் தேதி தொடக்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

5வது நாடு இந்தியா

உலகளவில் சீனா, ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் பிரான்ஸ் ஆகிய 4 நாடுகளில் மட்டுமே ஹைடர்ஜன் ரயில் இயக்கப்பட்டு வருகின்றன. இப்போது 5வது நாடாக இந்தியா இணைகிறது.

வேகம் மணிக்கு 140 கி.மீ.

பெட்ரோல், டீசல் மற்றும் மின்சாரம் என்றில்லாமல் ஹைட்ரஜன் எரிபொருளை மட்டுமே கொண்டு மணிக்கு சுமார் 140 கி.மீ. வேகத்தில் சீறிப்பாயும் ஆற்றல் படைத்தது ஹைட்ரஜன் ரயில்.

1,200 குதிரைத்திறன் சக்தி

ஹைட்ரஜன் ரயிலை இயக்கும் உலகின் மற்ற 4 நாடுகளும் 500 முதல் 600 குதிரைத் திறன் கொண்ட ரயிலையே இயக்குகின்றன. ஆனால் இந்தியா தனது முதல் ஹைட்ரஜன் ரயிலை 1,200 குதிரைத் திறனுடன் இயக்கவுள்ளது. இது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

ஒரு ஹைட்ரஜன் ரயிலைத் தயாரிக்க சுமார் ரூ.80 கோடி வரை செலவாகும்.

கடந்த 2023-24 நிதியாண்டில் ஒன்றிய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில், 35 ஹைட்ரஜன் ரயில்களை உருவாக்க ரூ.2,800 கோடியை ஒதுக்கீடு செய்தது. இதில் தற்போது முதல் ரயில் பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், மற்ற ரயில்களை உருவாக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஹரியானாவில் முதல் ஹைட்ரஜன் ரயில்

சென்னை ஐசிஎஃப் நிறுவனம் உருவாக்கும் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில், ஹரியானாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி முதல்கட்டமாக 89 கி.மீ. நீளமுள்ள ஜிந்த் முதல் சோனிபட் வழித்தடத்தில் மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் ஹைட்ரஜன் ரயில் இயக்கப்பட உள்ளது.

டிக்கெட் விலை ரூ. 5

ஹைட்ரஜன் ரயிலில் பயணிப்பதற்கான டிக்கெட் விலை ரூ.5 முதல் ரூ.25 வரை இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த டிக்கெட் கட்டணம் மெட்ரோ ரயில் கட்டணத்தை விடக் குறைவு என்பதால், சாமானிய மக்களும் ஹைட்ரஜன் ரயிலில் பயணிக்க முடியும்.

பொதுமக்கள் மகிழ்ச்சி

இந்தக் கட்டணம் கிட்டத்தட்ட மின்சார ரயில் கட்டணத்தை அடிப்படையாக கொண்டே நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. டிக்கெட் விலை குறைவாக இருப்பது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

==============

logo
Thamizh Alai
www.thamizhalai.in