

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 240 பேர் பலியானார்கள்.
மருத்துவ கல்லூரி உணவுக் கூடம் மீது விமானம் விழுந்து நொறுங்கியதில், மாணவர்களும் உயிரிழந்தனர்.
இந்த விபத்தை தொடர்ந்து ஏர் இந்தியாவில் பயணிக்க பயணிகள் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.
ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களும் டிக்கெட்டுகளை கேன்சல் செய்தனர்.
இதன்காரணமாக சர்வதேச வழித்தடங்களில் டிக்கெட் முன்பதிவு 20 சதவீதம் வரை குறைந்து விட்டது.
இதனால் பயணிகளை ஈர்க்கும் வகையில் டிக்கெட் விலையை குறைக்க வேண்டிய நிலைக்கு ஏர் இந்தியா தள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, உள்நாட்டு விமான வழித்தடங்களில் 10 முதல் 12 சதவீதம் வரையிலும், வெளிநாட்டு வழித்தடங்களில் 18 முதல் 22 சதவீதம் வரையும் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
====