Tirumala Tirupati Laddu Controversy Tirumala Jeeyars Letter to Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu on Tirumala Tirupati Laddu Issue
Tirumala Tirupati Laddu Controversy Tirumala Jeeyars Letter to Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu on Tirumala Tirupati Laddu IssueSOURCE: GOOGLE

கலப்பட நெய்யில் திருப்பதி லட்டு: ஆந்திர முதல்வருக்கு ஜீயர் கடிதம்

Tirumala Tirupati Laddu Controversy : லட்டு சர்ச்சை விவகாரம் : திருமலை ஜீயர் , ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
Published on

Tirumala Jeeyars Letter to Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu on Tirumala Tirupati Laddu : திருமலை திருப்பதி பிரசாதமான லட்டு விவகார சர்ச்சை பற்றி கவலை தெரிவித்தும், பிரசாதத்தின் புனிதத் தன்மையை இனிவரும் காலங்களில் பாதுகாக்க வேண்டி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருமலை ஜீயர் , ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

திருப்பதி - லட்டு பிரசாதம்

திருமலையில் ஸ்ரீவெங்கடேஷ்வர ஸ்சுவாமிக்கு நைவேத்தியமாக ஸ்ரீவாரி லட்டு படைக்கப்பட்டு, இறைவனை தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.

இறைவனுக்கு படைக்கப்படும் பிரசாதம் பக்தர்களின் ஆழமான நம்பிக்கையுடன் தொடர்புடையது.

பிரசாதம் வெறும் உணவுப்பொருள் கிடையாது

திருமலையில் ஸ்சுவாமிக்கு படைக்கப்படும் நைவேத்தியம் வெறும் உணவுப்பொருள் கிடையாது. சனாதன தர்மத்தை பின்பற்றுகிறவர்களின் நம்பிக்கை மற்றும் உறுதித்தன்மையுடன் தொடர்பு கொண்டது.

கோவில் பிரசாதம் - புனிதமானது

இத்தகைய புனிதமான பிரசாதத்தில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் கலப்படம் இருப்பதாக சிபிஐ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

மிகப்பெரிய பாவம்

பிரசாதத்திற்கு பயன்படுத்தும் நெய் கலப்படமானது என்று தெரிந்தும் அதை பயன்படுத்துவது மிகப்பெரிய பாவம். தர்மத்திற்கு எதிரானதும் கூட.

இந்த செயலால் திருமலை திருப்பதிக்கு வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் மனம் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கும்.

இதை நினைக்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தரம், தூய்மை பாதுகாப்பு

மேலும் இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்கவும், தேவஸ்தானத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களின் தரத்தையும் , தூய்மையையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், முதல்வர் சந்திரபாபு நாயுடு மீதான நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

முதல்வர் மீதான நம்பிக்கை

ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின் போது தான், லட்டில் கலப்படம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால் தான் திருமலை திருப்பதி ஜீயர் தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாக இந்த கடிதத்தை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

===============

logo
Thamizh Alai
www.thamizhalai.in