

அமைச்சர் கீர்த்தனா - நிர்மலா சீதாராமன் சந்திப்பு :
தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள், தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார்.
தேசிய தொழில் வழித்தட மேம்பாட்டு ஆணையத்தின் கூட்டத்தில் பங்கேற்ற அவர், சென்னை – திருவனந்தபுரம் தொழில் வழித்தடம் அமைப்பது, சென்னை – தூத்துக்குடி தொழில் வழித்தடத் திட்டத்தை விரைவுபடுத்துவது மற்றும் மாநிலம் முன்மொழிந்துள்ள புதிய தொழிற்பூங்காக்களுக்கு மத்திய அரசின் ஆதரவைப் பெறுவது குறித்து வலியுறுத்தினார்.
சென்னை - திருவனந்தபுரம் தொழில் வழித்தடம் :
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த அமைச்சர் கீர்த்தனா முக்கியமாக தென் இந்தியாவில் கூடுதல் தொழிற்சாலைகள் வரவேண்டும் எனவும் அதற்க்கு மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும்
அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு மற்றும் கேரளாவை இணைக்கும் வகையில் சென்னை - திருவனந்தபுரம் தொழில் வழித்தடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சர் கீர்த்தனா முன்வைத்தார்
இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால் இரு மாநிலத்திற்கும் தொழில்ரீதியாக நல்ல முன்னேற்றம் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்
7 புதிய தொழிற்பூங்காக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்:
மத்திய அரசின் BHAVYA திட்டத்தின் கீழ் தமிழகம் முன்மொழிந்துள்ள 7 புதிய தொழிற்பூங்காக்களுக்கு நிதி மற்றும் நிர்வாக ஆதரவு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் கோரிக்கை வைத்தார்
முதலீடுகளை ஈர்க்கும் முயற்சி :
உலகளாவிய நிறுவனங்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஈர்க்க தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
தொழில் வழித்தடங்கள் மற்றும் தொழிற்பூங்காக்கள் மூலம் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை மேலும் வலுப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
பியூஸ் கோயலும் கலந்து கொண்டார் :
இந்த நிகழ்வில் மத்திய நீதியமைச்சர் மட்டுமின்றி மத்திய வர்த்தகமைச்சர் பியூஸ் கோயல் கலந்துகொண்டு மாநிலங்களின் தகவல்கள் மற்றும் கோரிக்கைகளை கேட்டுபெற்றுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு புதிய வாய்ப்பு:
டெல்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பு, தமிழகத்திற்கு புதிய முதலீடுகள் மற்றும் தொழில் வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்கும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
மத்திய மாநில ஒத்துழைப்பின் மூலம் தொழில் துறையில் புதிய முன்னேற்றங்கள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.