வங்கி அதிகாரிகள் உச்சகட்ட கெடுபிடி : இறந்த சகோதரியின் "எலும்புக் கூட்டுடன் வந்த முதியவர்" - ஒடிசாவை அதிரவைத்த சம்பவம்!

Odisha Bank Incident: தனது சகோதரியின் சடலத்தைத் தோண்டி எடுத்து, அதன் எலும்புக்கூட்டை ஒரு மூட்டையில் சுமந்து கொண்டு வங்கிக்கு வந்துள்ளார்.
 Elderly Man Arrives with Deceased Sister's Skeleton —A Shocking Incident in Odisha!
Elderly Man Arrives with Deceased Sister's Skeleton —A Shocking Incident in Odisha!source:x.com
1 min read

Extreme High-Handedness by Bank Officials: Elderly Man Arrives with Deceased Sister's Skeleton —A Shocking Incident in Odisha!

ஒடிசாவில் நெஞ்சை உலுக்கும் நிகழ்வு

மனிதாபிமானமற்ற அதிகாரிகளின் போக்கால் சாமானிய மக்கள் எந்த அளவிற்குப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்குச் சான்றாக ஒடிசாவில் ஒரு நெஞ்சை உலுக்கும் நிகழ்வு அரங்கேறியுள்ளது.

ரூ.20,000 பணத்தை எடுக்க 2 மாதமாக போராட்டம்

ஒடிசா மாநிலம் கேந்துஜர் மாவட்டத்தைச் சேர்ந்த 50 வயது முதியவர் ஜீது முண்டா, தனது வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு துயரத்தைச் சந்தித்துள்ளார்.

இறந்துபோன சகோதரியின் வங்கிக் கணக்கில் ரூ.20,000

கடந்த ஜனவரி மாதம் இவரது சகோதரி கல்ரா முண்டா காலமானார். அவரது வங்கிக் கணக்கில் இருந்த சுமார் ₹20,000 பணத்தை எடுப்பதற்காக ஜீது முண்டா கடந்த சில மாதங்களாக வங்கிக்கு அலைந்துள்ளார்.

வங்கி அதிகாரிகளின் விசித்திர நிபந்தனை

பணத்தைப் பெறுவதற்காக ஜீது முண்டா பலமுறை வங்கி அதிகாரிகளை அணுகியும் பலன் கிடைக்கவில்லை. உயிரிழந்த தனது சகோதரியின் பணத்தை முறையாகப் பெறுவதற்கான சட்ட நுணுக்கங்கள் அவருக்குத் தெரியவில்லை.

இறந்த சகோதரியை அழைத்து வர வேண்டுமா?

ஆனால், வங்கி அதிகாரிகளோ மனிதாபிமானமின்றி, கணக்கு வைத்திருப்பவரை அதாவது இறந்த சகோதரியை நேரில் அழைத்து வந்தால் மட்டுமே பணத்தைத் தர முடியும் என்று பிடிவாதம் பிடித்ததாகக் கூறப்படுகிறது.

உச்சகட்ட விரக்தியில் ஜீது முண்டா

இதனால் மிகுந்த மனவேதனையும் விரக்தியும் அடைந்த ஜீது முண்டா, வேறு வழியின்றிப் புதைக்கப்பட்ட தனது சகோதரியின் சடலத்தைத் தோண்டி எடுத்து, அதன் எலும்புக்கூட்டை ஒரு மூட்டையில் சுமந்து கொண்டு வங்கிக்கு வந்துள்ளார்.

காவல்துறையின் கண்டனம் மற்றும் நடவடிக்கை

எலும்புக்கூட்டுடன் முதியவர் வங்கிக்கு வந்ததைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இது குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

காவல் ஆய்வாளர் கிரண் பிரசாத் சாஹு தகவல்

இது தொடர்பாகப் பேசிய காவல் ஆய்வாளர் கிரண் பிரசாத் சாஹு, "ஜீது முண்டா படிப்பறிவில்லாதவர் என்பதால் அவருக்கு வாரிசு சான்றிதழ் போன்ற நடைமுறைகள் தெரியவில்லை.

கடுமையான கண்டனம்

ஆனால், வங்கி அதிகாரிகள் ஒரு பாமர மனிதருக்குச் சரியான வழிகாட்டுதலை வழங்காமல், இறந்தவரை நேரில் அழைத்து வரச் சொன்னது கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்தார்.

மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் தற்போது தலையிட்டுள்ளது.

அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும்

அவருக்குச் சேர வேண்டிய பணத்தை உடனடியாகப் பெற்றுத் தரவும், இந்தப் புகாரில் தொடர்புடைய அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in