இரண்டுமுறை 10ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு : 2026ல் அறிமுகம்

ஆண்டுக்கு இரண்டு முறை 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று மத்திய கல்வி வாரியமான சிபிஎஸ்இ அறிவித்து இருக்கிறது.
https://x.com/search?q=10%20th
1 min read

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கு இதுவரை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தேர்வெழுதும் நடைமுறை இருந்து வருகிறது.

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஓரிரு மாதங்களில் இன்னொரு தேர்வெழுத வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் 10ம் வகுப்பிற்கு ஆண்டு இரண்டு பொதுத்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

2020ல் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டதன் தொடர்ச்சியாக, மாணவர்களுக்கு உள்ள தேர்வு பயத்தைக் குறைக்கும் வகையில் இந்த மாற்றம் செய்யசப்பட்டு இருக்கிறது.

பெற்றோர் மற்றும் பொதுமக்களின் கருத்துகளைக் கேட்ட பின்பு இத்திட்டத்தை 2026 கல்வியாண்டு முதல் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி மற்றும் மே மாதம் என இரண்டு முறை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும்.

புதிய மாற்றத்தின்படி முதல் முறை நடக்கும் தேர்வு மட்டுமே கட்டாயம் என்றும், இரண்டாவது முறை நடைபெறும் தேர்வில் மாணவர்கள் விரும்பினால் பங்கேற்கலாம்.

கணிதம், அறிவியல், சமூக அறிவியல், மொழிப்பாடம் இதில் ஏதாவது 3 பாடங்களில் மதிப்பெண்ணை உயர்த்திக் கொள்ள இரண்டாவது நடைபெறும் தேர்வில் பங்கேற்கலாம்.

அதிக மதிப்பெண் எடுக்கும் தேர்வு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு அவை சான்றிதழில் இடம்பெறும்.

10ம் வகுப்பை முடித்துவிட்டு 12ம் வகுப்பில் சேரும்போது மாணவர்கள் குறிப்பிட்ட பாடங்களில் எடுத்த மதிப்பெண் அடிப்படையிலேயே, பாடப்பிரிவுகள் ஒதுக்கப்படுகின்றன.

அப்போது எதிர்பார்த்த மதிப்பெண் இல்லையென்றால், மாணவர்களுக்கு விரும்பிய பாடப்பிரிவு கிடைப்பதில்லை.

அத்தகைய மாணவர்களுக்கு இதுபோன்ற 2வது வாய்ப்பு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

===

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in