யுஜிசி நெட் தேர்வு: விண்ணப்பிக்க அக்டோபர் 31 வரை அவகாசம் நீட்டிப்பு : NTA அறிவிப்பு..!

யுஜிசி நெட் தேர்வு தேசிய தேர்வு முகமை மூலம் ஆண்டுக்கு ஜூன் மற்றும் டிசம்பர் என இருமுறை நடத்தப்படுகிறது.
UGC NET December Exam Registration Deadline Extended
UGC NET December Exam Registration Deadline Extendedsource:ai generated
1 min read

UGC NET December Exam Registration Deadline Extended

விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

நாடு முழுவதும் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள யுஜிசி நெட் (UGC NET) தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

உதவிப் பேராசிரியர் பதவிக்கு தகுதித் தேர்வாகவும், முனைவர் படிப்பில் உதவித்தொகை பெறவும் மற்றும் முனைவர் படிப்பிற்கான நுழைவுத் தேர்வாகவும் யுஜிசி நெட் தேர்வு தேசிய தேர்வு முகமை மூலம் ஆண்டுக்கு ஜூன் மற்றும் டிசம்பர் என இருமுறை நடத்தப்படுகிறது.

டிசம்பர் மாதத் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி வெளியானது. முன்னதாக அக்டோபர் 28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தாமதக் கட்டணம் இன்றி அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கும் வசதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

முக்கியத் தேதிகள் மற்றும் திருத்தம் செய்யும் வசதி

விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய நவம்பர் 2 முதல் 4-ஆம் தேதி வரை அனுமதி வழங்கப்படும். தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மைய நகரத்தின் விவரங்கள் நவம்பர் 23-ஆம் தேதி வெளியிடப்படும்.

தேர்வுக்கான அட்மிட் கார்டு டிசம்பர் 7-ஆம் தேதி வெளியாகும். மொத்தம் 87 பாடங்களுக்கு டிசம்பர் 14 முதல் 18 வரை மற்றும் டிசம்பர் 21 ஆகிய 6 நாட்களில் தேர்வுகள் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம் மற்றும் இணையதளம்

இதுவரை விண்ணப்பிக்காத தேர்வர்கள் https://ugcnet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம்.

கட்டண விவரங்கள்:

பொதுப் பிரிவினர்: ரூ. 1,150

ஓபிசி பிரிவினர்: ரூ. 600

எஸ்சி , எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள்: ரூ. 325

தேசிய தேர்வு முகமையின் தரவுகளின்படி, அக்டோபர் 26-ஆம் தேதி வரை 5,50,048 பேர் விண்ணப்பப் பதிவு செய்துள்ள நிலையில், அதில் 3,73,419 பேர் கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தைச் பூர்த்தி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

===========

logo
Thamizh Alai
www.thamizhalai.in