

மத்திய பட்ஜெட் 2026-27
Union Budget 2026-27 Expectations Tamil : 2026-27ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கலாக இன்னும் ஒரு சில நாட்களே இருக்கின்றன. இந்த பட்ஜெட் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. சம்பளம் வாங்கும் ஊழியர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் வருமான வரிச் சலுகைகளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
வரி குறைப்புகள் இருக்காது!
ஆனால், நிபுணர்களின் பெரிய அளவிலான வரி குறைப்புகள் இந்த ஆண்டு சாத்தியமில்லை என்கின்றனர். இதற்கு முக்கிய காரணங்கள், அரசின் நிதி நிலைமை, சமீபத்திய வரிச் சீர்திருத்தங்கள் மற்றும் உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, சமூக நலத் திட்டங்களுக்கான தொடர்ச்சியான செலவினங்கள்.
நிதி ஸ்திரத்தன்மைக்கு முக்கியத்துவம்
புதிய வரி விதிப்பு முறை ஏற்கனவே அறிமுகப் படுத்தப்பட்டுள்ளதால், அரசு ஸ்திரத்தன்மை மற்றும் நிதி ஒழுக்கத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில பட்ஜெட்களில், மத்திய அரசு வருமான வரி விதிப்பு முறையில் கணிசமான மாற்றங்களைச் செய்துள்ளது. குறிப்பாக, புதிய வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
சீர்திருத்தங்களில் அரசு கவனம்
இந்த புதிய முறையில் வரி விகிதங்கள் குறைவாகவும், வரி விலக்குகள் குறைவாகவும், வரி தாக்கல் செய்வது எளிதாகவும் உள்ளது. இதை அரசு ஒரு தற்காலிக நிவாரணமாகப் பார்க்காமல், நீண்ட காலத்திற்கான ஒரு கட்டமைப்பு சீர்திருத்தமாகவே கருதுகிறது.
எனவே, இந்த ஆண்டு பட்ஜெட்டில் பெரிய அளவிலான வரிச் சலுகைகளை விட, ஸ்திரத்தன்மை, கணிக்கக்கூடிய தன்மை மற்றும் நிதி ஒழுக்கத்திற்கே அரசு முக்கியத்துவம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரி தாக்கலில் எளிமை
வரி செலுத்துவோரின் எதிர்பார்ப்புகளும் மாறி வருகின்றன. அவர்கள் பெரிய அளவிலான வரி விகிதக் குறைப்புகளை விட, நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்கும் சீர்திருத்தங்களையே அதிகம் எதிர்பார்க்கின்றனர்.
பணவீக்கத்துடன் இணைந்த வரி அடுக்குகளை அதிகரிப்பது, விலக்கு வரம்புகளை நியாயப்படுத்துவது மற்றும் வரி தாக்கல் செய்வதை எளிதாக்குவது போன்ற கோரிக்கைகள் பட்ஜெட் மீது இருக்கின்றன.
நிறுவனங்களுகு குறைவான சலுகை
கடந்த ஆண்டுகளில் கார்ப்பரேட் மற்றும் தனிநபர்களுக்கு ஏற்கனவே கணிசமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதால், பெரிய அளவிலான வரி குறைப்புகளை எதிர்பார்க்க முடியாது.
உள்நாட்டு நிறுவனங்களுக்கான வரி விகிதங்கள் தற்போது சுமார் 25 சதவீதமாகவும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கான வரி விகிதங்கள் சுமார் 38 சதவீதமாகவும் உள்ளன.
இது முந்தைய உயர் விகிதங்களுடன் ஒப்பிடும்போது அதிகம்தான்.
ஜிஎஸ்டி மாற்றத்தால் வருவாய் இழப்பு
தனிநபர்களும் புதிய வரி விதிப்பு முறையில் உயர்ந்த வரி அடுக்குகளாலும், நியாயப்படுத்தப்பட்ட விகிதங்களாலும் பயனடைந்துள்ளனர்.
மேலும், கடந்த ஆண்டின் அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி விகித மாற்றம் சுமார் ரூ. 48,000 கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, பட்ஜெட்டில் வரி குறைப்புகள் பெரிய அளவில் இல்லா விட்டாலும், நிதி ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, சாமான்ய மக்கள் பலன் பெரும் வகையில் சில அறிவிப்புகள் இருக்கும் எனத் தெரிகிறது.
=========================